சந்திரமுகி படத்துல நான் தான் நடிச்சிருக்கணும்..ஜோதிகாவை சீண்டிய பிரபல நடிகை.!
Author: Selvan14 February 2025, 2:06 pm
நல்ல வாய்ப்பை மிஸ் பண்ண சினேகா
தமிழில் 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,ஜோதிகா நயன்தாரா,பிரபு,வடிவேல் உட்பட பலர் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று,வசூலை வாரி குவித்தது.
இதையும் படியுங்க: பக்கா பொறுக்கி..சினிமாவை விட்டு விலக முடிவு…மேடையில் மிஷ்கின் பர பர பேச்சு.!
இப்படத்தில் ஜோதிகா நடிப்பில் மிரட்டியிருப்பார்,அதுவும் பேயாக நடித்த காட்சிகளை இப்போதும் டிவியில் போட்டால் ரசிகர்கள் வியந்து பார்க்கிறார்கள்.ஆனால் முதலில் ஜோதிகாவிற்கு பதிலாக படக்குழு நடிகை சினேகாவை அணுகியுள்ளது.இதனை சினேகா ஒரு பழைய பேட்டியில் கூறியிருப்பார்.
தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ஸ்னேகாவிடம் தொகுப்பாளர் நீங்க மிஸ் பண்ணி பிரம்மாண்டமா வெற்றி அடைந்த படம் எது என்று கேட்ட போது,நடிகை சினேகா சந்திரமுகி என தெரிவித்தார்,அந்த படத்தில் ஜோதிகா ரோல் முதலில் எனக்கு தான் வந்தது,அப்போது சில தனிப்பட்ட காரணங்கள் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது.
இதனை இயக்குனர் வாசுவே பல மேடைகளில் சொல்லியுள்ளார்,அப்படத்தின் நான் நடித்திருந்தால் ஜோதிகாவை விட வேற மாதிரி இருந்திருக்கும் என அந்த பேட்டியில் கூறியிருப்பார்.சினேகாவின் இந்த பழைய வீடியோ தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.