சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியா இவுங்க…வியப்பில் ரசிகர்கள்..!
Author: Selvan31 December 2024, 4:24 pm
பிரகர்ஷிதாவின் அழகான போட்டோ வைரல்
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆக வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி.இப்படத்தில் ரஜினியுடன் ஜோதிகா,நயன்தாரா,பிரபு,வடிவேலு நாசர்,மாளவிகா என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்தார்கள்.
இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் 800 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது.நயன்தாராவுக்கு சந்திரமுகி ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இப்படத்தில் பொம்மி என்ற ஒரு குழந்தை கேரக்டரில் நடித்தவர் பிரகர்ஷிதா.இவருடைய நடிப்பு,படத்தில் அருமையாக இருந்தது மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கவர்ந்தது.
இதையும் படியுங்க: புது வருடத்தில் OTT-யில் களமிறங்கும் சூப்பர் ஹிட் படங்கள்…பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
படம் ரிலீஸ் ஆகி பல ஆண்டு கடந்த நிலையில் இந்த குழந்தை நட்சத்திரம் இப்போ எப்படி இருப்பார் என்று ரசிகர்கள் தேடிய போது,அவருடைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியப்பில் உறைந்து போனார்கள்.
அந்த அளவிற்கு ஒரு ஹீரோயின் போல அழகா ஹோம்லியாக உள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அட இவுங்க பேசாம சினிமாவில் ஹீரோயின் ஆக நடித்தால் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும் என பேசி வருகின்றனர்.