ராஷ்மிகா திருமணம் ; இப்போது புதிய சர்ச்சையில் “சார்லி 777″நடிகர்..

Author: Sudha
17 July 2024, 1:45 pm

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரக்சித் ஷெட்டி.பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாய்க்கும் மனிதனுக்குமான அன்பை மையப்படுத்தி வெளிவந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சார்லி 777 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானவர்.

நடிகை ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று கடைசி நேரத்தில் நின்று போனது சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருந்தாலும் தற்போது படங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் ‛பேச்சுலர் பார்ட்டி’ என்கிற படம் வெளியானது. இந்தப் படத்தை இவரே தயாரித்தும் இருந்தார். அர்ஜுன் ராமு என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் ஏற்கனவே வெளியான நியாய எல்லிடே மற்றும் காலிமாத்து ஆகிய படங்களில் இடம் பெற்ற பாடல்களை தங்களது அனுமதி இல்லாமல் இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பதாக எம்.ஆர்.பி மியூசிக் என்கிற நிறுவனம் புகார் அளித்திருந்தது.

இதைத்தொடர்ந்து காப்பிரைட் உரிமை சட்டத்தின்படி பெங்களூரு போலீசார் இவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்