ரகசிய மனைவியான நடிகையின் சகோதரி.. சிவாஜி மகன் செய்த சதி!
Author: Udayachandran RadhaKrishnan19 December 2024, 2:40 pm
நடிகர் சிவாஜி தனது மனைவியுடன் வெளிப்படையான வாழ்க்கையை வாழ்ந்தவர். இந்த ஜோடியை சினிமா உலகமே பாராட்டியது.
ஆனால் இவர்களுக்கு பிறந்த மகன்களாக பிரபு மற்றும் ராம்குமார் இருவரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
ஏன் பத்மினியுடன் சிவாஜியை வைத்து கிசு கிசுக்கள் எழுந்தன. ஆனால் இருவரும் வெளிப்படையாக நாங்கள் நண்பர்கள் என்று உறுதிபட கூறி, ஊடகங்களின் வாயை அடக்கினர்.
இதையும் படியுங்க : சுழட்டி அடிக்க போகும் “காஞ்சனா 4″…ராகவா லாரன்ஸ் கொடுத்த மிரட்டலான அப்டேட்..!
ஆனால் பிரபு செய்த வேலை எல்லோருக்கும் தெரியும். அந்த பிரச்னையில் சிவாஜி தலையிட்டு முடித்து வைத்தார். ஆனால் மற்றொரு மகன் ராம்குமாரோ, நடிகை ஸ்ரீபிரியாவின் சகோதரி மீனம்மாவுடன் ரகசிய வாழ்க்கையை நடத்தி, இரண்டாவதாக மனைவியாக்கினார்.
இவர்களுக்கு பிறந்த மகன் தான் சிவக்குமார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதே சிவக்குமார்தான். ஆனால் இதுவரை ராம்குமார் அவரை மகனாக அங்கீகரிக்கவில்லை.
இது குறித்து சேகுவாரா பரபரப்பான பேட்டி கொடுத்துள்ளார். அதில் சிவக்குமார் என் பையன் என்று ஒரு வார்த்தை சொல்வதில் ராம்குமாருக்கு என்ன தயக்கம்? சிவாஜி குடும்பத்தில் பிறந்துவிட்டு, இவ்வாறு ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்வது மிகப் பெரிய தவறு.
பணம் இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது, பெரிய குடும்பத்தின் மகன் என்பதற்காக எதையும் செய்யலாமா? ராம்குமார் தான் சிவாஜியின் பெயரை இழக்க வைத்துள்ளான்.
இந்த விசயத்தை மறைக்க முக்கிய காரணம் சொத்துதான். சொத்துக்கு பங்கு கேட்டு சிவகுமார் வருவார் என்பதற்காக, ராம்குமார் அவனை தனது வாரிசாக ஒப்புக் கொள்ள மறைத்து வருகிறார்.
சொத்தை கொடுங்கள் அல்லது கொடுக்காமல் போகுங்கள். ஆனால் அந்த பையனுக்கு ஏன் “என் வாரிசு” என்று அங்கீகாரம் கொடுக்க மறுக்கின்றீர்கள்? என்று சேகுவாரா அந்த பேட்டியில் விமர்சித்து தாக்கியுள்ளார்.