செக் வெச்சுட்டாங்க.. செக் மோசடி வழக்கில், அஜித் பட தயாரிப்பாளர் கைது..!

Author: Vignesh
26 February 2024, 6:00 pm

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் காதல் கோட்டை, வெற்றி கொடி கட்டு உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களை தயாரித்தவர். இவர் பிரபல நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து தயாரித்த படத்திற்காக பிரபல நிறுவனமான ராஜ்டிவி நிறுவனத்தில் ஒரு கோடியே 70 லட்சம் கடனாக வாங்கியுள்ளார்.

அந்தப் பணத்திற்காக காசோலைகளை கொடுத்துள்ளார். ஆனால், பணம் இல்லாமல் போக காசோலை திரும்பி வந்துவிட்டது. இதனால், ராஜ் டிவி நிறுவனம் பலமுறை பணத்தைக் கேட்ட நிலையில், சிவசக்தி பாண்டியன் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால், ராஜ் டிவி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தனர். மேலும், நீதிமன்றமும் பல தவணைகள் வழங்கியும் பணத்தை திருப்பித் தர முன்வராமல் இருந்த நிலையில், அவரை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, நுங்கம்பாக்கம் போலீசார் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்தனர். பிறகு அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அடைத்தனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?