பிரபல தொகுப்பாளினியான மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை ஷோ, யூடியூப் என கிடுகிடுவென வளர்ந்துவிட்டார்.
இவர் வீட்டை எதிர்த்து உசைன் என்பவரை மத மறுப்புத் திருமணம் செய்து கொண்டு கணவருடன் வசித்து வருகிறார். இதனிடையே அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஜாக்பாட் அடித்தது போல் அவரது வாழ்க்கையை உயர்த்தி நிறுத்தியது.
இதனிடையே திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறுவதாக அறிவித்து பேரதிர்ச்சி கொடுத்தார். அதன் காரணம் அவர் கூறாத நிலையில் தற்போது செஃப் தாமு, “மணிமேகலை எனக்கு மகள் போன்றவர்.
அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு போனது எங்களுக்கு நஷ்டம் தான்.அவரது காமெடியை அதிகம் நான் மிஸ் பண்றேன். இது அவரது விருப்பம், anchor போன்ற விஷயத்தில் கவனம் செலுத்த இருக்காங்கனு நினைக்குறேன். அவரின் எதிர்காலம் அவருக்கு முக்கியம்.
அதனால் எடுத்த முடிவு தான் இது என கூறி உண்மையை பேட்டி ஒன்றில் போட்டு உடைத்துவிட்டார். இப்படி எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே Daddy என மணிமகேலை உங்க மீது கோபம் கொள்ளாமல் இருந்தால் சரி தான்.