இந்த போட்டோவில் இருக்கும் CWC பிரபலம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Author: Vignesh
2 April 2024, 6:12 pm

பொதுவாக சினிமா நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில், ட்ரென்ட் ஆகும். உச்ச நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் நிறைய வெளியாகிவிட்டது. ஆனால், அவர்களையும் தாண்டி நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். அந்தவகையில், சின்னத்திரை பிரபலத்தின் புகைப்படம் தற்போது, வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் சின்னத்திரை பிரபலம் யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

cook with comali

மேலும் படிக்க: உடம்புல அவ்வளவு பிரச்சினை.. லாஸ்லியா இதனால் தான் இப்படி ஆனாராம்..!

அதாவது, இந்தியாவில் இருக்கக்கூடிய பிரபல சமையல் கலைஞர்களில் ஒருவர்தான் தாமு என்கிற கோதண்டராமன் தாமோதரன் 40 வருடங்களுக்கும் அதிகமாக உணவு வழங்கல் துறையில் அனுபவம் பெற்று இருக்கும் தாமு 20 ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வராக பணியாற்றி இருக்கிறார். இல்லத்தரசிகளுக்கு 26 புத்தகங்களும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களுக்கு சமையல் புத்தகங்களும் இவர் எழுதியுள்ளார்.

cook with comali

இப்படி சமையலில் பல சாதனைகளை செய்துள்ள தாமு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முக்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் படிக்க: மாமியாருக்கு முத்தம் கொடுத்தால் தப்பா?.. கொந்தளித்த ரோபோ சங்கர் குடும்பம்..!(Video)..!

cook with comali

இப்போது, குக் வித் கோமாளி அடுத்த சீசனில் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தாமு இடம்பெற்றிருக்கும் குக் வித் கோமாளி சிறப்பு நிகழ்ச்சியின் பிரமோ வீடியோ வெளியாகி இருந்தது. இந்நிலையில், தன்னுடைய இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்போது, குண்டாக இருக்கும் தாமு இளம் வயதில் எப்படி உள்ளார் என்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக்காகி உள்ளனர்.

  • valaipechu bismi said the reason behind empuraan movie re censor on sudden விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்