எக்ஸ்லேட்டரில் சிக்கிய கால்.. மகள் குறித்து வெங்கடேஷ் பட் சொன்ன அதிர்ச்சியான விஷயம்..!

Author: Vignesh
3 October 2023, 10:30 am

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் பணியாற்றி வரும் வெங்கடேஷ் பட் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அது மட்டும் இன்றி கிச்சன் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

venkatesh bhat-updatenews360

இந்நிலையில், வெங்கடேஷ் பட் சென்னையில் இருக்கும் ஒரு பிரபலமான மாளுக்கு மகளுடன் சென்றபோது நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், மாலில் உள்ள எஸ்கலேட்டரில் செல்லும் போது மகளின் கால்கள் சிக்கிக் கொண்டது என்றும், தான் இழுக்காமல் இருந்திருந்தால் ஒரு பெரிய ஆபத்து மகளுக்கு ஏற்பட்டிருக்கும் என வெங்கடேஷ் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிவித்திருக்கிறார்.

venkatesh bhat-updatenews360

அதனால், குழந்தைகளை கூட்டிச் செல்லும்போது கவனத்துடன் இருங்கள் என்று அவர் அறிவுரையும் கூறி இருக்கிறார். வெங்கடேஷ் பட் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில் தற்போது அந்த மாலில் அவருக்கு போன் செய்து பேசியிருக்கிறார்களாம்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 535

    0

    0