பிரபல நடிகையிடம் பாலியல் அத்துமீறல்… பதுங்கிய பிரபல தொழிலதிபர் கைது!
Author: Udayachandran RadhaKrishnan8 January 2025, 5:01 pm
பிரபல நடிகை கொடுத்த பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்து பிரபல நகைக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
பிரபல நடிகை ஹனி ரோஸ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஒரு பாலியல் புகார் அளித்தார்.
அதில் செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் ஆபாசமாக தன்னை பற்றி பேசியதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
ஆனால் இந்த வழக்கில் இருந்து முன்ஜாமீன் பெற பாபி முயன்று வந்துள்ளார். அதற்குள் போலீசார் பாபியை கைது செய்ய தனிப்படை அமைத்தது.
அவர் வயநாட்டில் உள்ள ரிசார்ட்டில் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து எர்ணாகுளம் போலீசார் வயநாடு போலீசாருக்கு தகவல் அனுப்பி அவரை கைது செய்தனர்.
நடிகை ஹனிரோசிடம் தவறாக எதுவும் பேசவில்லை, நடக்கவில்லை.நான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது என கூறினார்.
இதனிடையே கேரள உய்ர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுளள்து. அதில் பெண்களின் உடல் அமைப்பை வர்ணிப்பது, உடல் அமைப்பு குறித்து பேசுவது அல்லது மெசேஜ் அனுப்புவது பாலியல் வன்கொடுமை என கூறியுள்ளது.
இதனால் பாபி மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்கு பதியப்பட்டுள்ளதால் அவருக் சிறை தண்டனை உறுதி என்றே கூறப்படுகிறது.
ஹனிரோஸ் குறித்து ஆபாசமாக தொழிலதிபரும், நகைக்கடை உரிடைமயாளருமான பாபி பேசியிருந்தார். இது குறித்து ஹனி ரோஸ் கூறியதாவது, இன்று எனக்கு அமைதியான நாள், கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பாலியல் புகார் கூறியதும், உடனே நடவடிக்கை எடுத்துவிட்டதாக கூறினார்.
இதனிடையே இன்று கோவையில் புதுப்பிக்கட்ட செம்மனூர் நகைக்கடை விழாவில் பங்கேற்க வரவிருந்த பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டதால், நடிகை ஹனசிதா திறப்பு விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.