“செக் மோசடியில் சிக்கிய பிரபல திரைப்பட தயாரிப்பாளர்”-நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு!

Author:
27 June 2024, 5:14 pm
Quick Share

காசோலை மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தங்கமீன்கள், தரமணி, குற்றம் கடிதல் போன்ற படங்களை ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் மூலம் தயாரித்தவர் ஜெ.சதீஷ்குமார். இவர் பைனான்சியர் இவர் 2017-ம் ஆண்டில் பைனான்சியர் ககன் போத்ராவிடம் தயாரிப்பாளர் சதீஷ்குமார் ரூ.2.6 கோடி லட்சம் கடன் பெற்றுள்ளார். தான் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்காக தயாரிப்பாளர் ஜெ. சதீஷ்குமார், பைனான்சியர் சுகன் போத்ராவிடம் காசோலையை வழங்கியுள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட சுகன் போத்ரா, வங்கிக் கணக்கில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால் சுகன் போத்ரா, சென்னை ஜார்ஜ் டவுன் 4வது விரைவு நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ஏ.கே.என். சந்திரபிரபா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சதீஷ்குமாருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அந்தக் கடன் தொகையை வட்டியுடன் சினிமா பைனான்சியர் சுகன் போத்ராவிடம் திரும்பிச் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Views: - 71

0

0

Leave a Reply