பாடகி சுசித்ரா பேசத் தடை.. உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!

Author: Vignesh
24 May 2024, 6:36 pm

பிரபல பாடகி, ஆர்ஜே, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது.

மேலும் படிக்க: “திருமண வாழ்விலிருந்து பிரிகிறோம்” – முடிவுக்கு வந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி மணவாழ்க்கை..!

சமீபத்தில் தனக்கு மனநிலை சரியில்லை என கூறி பயில்வான் ரங்கநான் வெளியிட்ட வீடியோவை பார்த்து கடுப்பான சுசித்ரா, தன்னைப் பற்றி பேச சொன்னது தனுஷ் தானே என்றும் தனுஷ் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று கேட்டும் விளாசினார். மேலும் தன்னிடம் சில வீடியோக்கள் இருக்கிறது, அதைப்பற்றியும் பேசுங்கள் என்றும் கூறி திணற வைத்தார். அவர் பேசிய ஆடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.

Suchitra Karthik

இந்த விவகாரத்தில் தனுஷின் பெயர் அடிப்பட்டது, அவரது ரசிகர்களுக்கு பெரும் சினிமா துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷ் இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார். தனுஷின் இந்த அமைதிக்கு காரணம் அவர் குறித்த ஏதோ ஒரு ஆதாரம் சுச்சியிடம் இருப்பதுதான் என கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகைகளுடன் தனுஷ் நெருக்கமாக இருந்ததால்தான் ஐஸ்வர்யாவுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட்டு தனுஷை எச்சரித்ததாகவும் கூறப்பட்டது. இதனால், விவாகரத்து வரை சென்று இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த சுசி லீக்ஸ் விவகாரத்தினால் சுசித்ராவின் கணவர் கார்த்திக் அவரை விவாகரத்து செய்து புரிந்துவிட்டு வேறொரு பெண்ணை மறுமணம் செய்துக்கொண்டார்.

மேலும் படிக்க: OVER டார்ச்சர்.. ஜிவி பிரகாஷ் விவாகரத்துக்கு அந்த நபர் காரணம்?.. பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்..!

இந்நிலையில், சுச்சி லீக்ஸ் சர்ச்சை விட தற்போது பெரிய சர்ச்சை ஒன்றை கிளம்பியிருக்கிறார் சுசித்ரா. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுசித்ரா அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்து இருந்தார். அதில் கமலஹாசன் தொடங்கி தனுஷ் வரை பலரையும் கண்டபடி விமர்சித்திருந்தார். அவரது முன்னாள் கணவர் கார்த்திக் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில், இனி youtube சேனல்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் எனது பேட்டிகளை தவறான கண்ணோட்டத்துடன் ஒளிபரப்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நான் பல youtube சேனல்களை பார்த்து வருகிறேன். அதில், தலைப்புகளில் என்னை பற்றி தவறாக கூறுகின்றார்கள்.

Suchitra Karthik

மேலும் படிக்க: நமக்கு எதுக்கு வம்புனு ஒதுங்கிய உச்ச நடிகர்கள் – மோடியின் Biopic’ல் ஹீரோவாக நடிக்கும் தமிழ் நடிகர்..!

ஆனால், இது எல்லாம் எந்த ஆதாரத்தை வைத்து அவர்கள் பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதைப்பற்றி நான் யோசிக்க போவதுமில்லை. இனி எந்த ஒரு youtube சேனலுக்கும் நான் பேட்டி கொடுக்கப் போவதில்லை. இனி எனது சொந்த சேனலில் மட்டுமே பேசுவேன். அதில், சினிமா விமர்சனங்களையும் தத்துவம் நிறைந்த விஷயங்கள் பற்றிய வீடியோக்களை மட்டுமே நான் வெளியிடுவேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

https://www.youtube.com/watch?v=BaATH-i2ag0

இந்நிலையில், சுசித்ரா தன்னைப் பற்றியும் தன்னுடைய குடும்பத்தை பற்றியும் தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்றும், அதனால் தானும் தன்னுடைய குடும்பமும் மனவருத்தத்தில் இருப்பதாகவும், அதனால் பாடகி சுசித்ரா தன்னை பற்றி தன்னுடைய குடும்பத்தை பற்றியும் கருத்துக்களை தெரிவிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் சுசித்ரா தங்களுடைய நற்பெயருக்கு களங்கும் விளைவித்தால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்ற நீதிபதிகள் சுசித்ரா கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க இடைக்கால தடை விதித்துள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 270

    0

    0