சென்னை சர்வதேச திரைப்பட விழா : விருதுகளை தட்டி சென்ற தமிழ் படங்கள் லிஸ்ட்..!
Author: Selvan20 December 2024, 6:16 pm
22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) கடந்த டிசம்பர் 12 முதல் 19 வரை சிறப்பாக நடத்தப்பட்டது. விழாவில் தமிழில் இருந்து உலக சினிமா வரை பல மொழி படங்கள் திரையிடப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன.
அமரன், போட், புஜ்ஜி அட் அனுப்பட்டி, செவப்பி, கொட்டுக்காளி, மகாராஜா, வாழை, தங்கலான் போன்ற 25 தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றன.
இந்தியன் பனோரமா பிரிவில் ஜிகர்தண்டா,டபுள் எக்ஸ் படங்கள் தேர்வாகின.
வெளிநாட்டு மொழிகளான ஈரான், ஜெர்மனி, செக் குடியரசு, தென் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் சிறந்த படங்கள் இடம்பெற்றது
சிறந்த படம்:
அமரன் இயக்குனர்: ராஜ்குமார் பெரியசாமி பரிசு: 1,00,000
நடிப்பிற்கான விருதுகள்
சிறந்த நடிகை: சாய் பல்லவி (அமரன்) பரிசு: 50,000
சிறந்த நடிகர்: விஜய் சேதுபதி (மகாராஜா) பரிசு: 50,000
இசை மற்றும் எழுத்து விருதுகள்
சிறந்த இசையமைப்பாளர்: ஜிவி பிரகாஷ் (அமரன்)
சிறந்த எழுத்தாளர்: சீனு ராமசாமி (கோழிப்பண்ணை செல்லத்துரை)
சிறப்பு விருதுகள்
சிறந்த குழந்தை நட்சத்திரம்: பொன் வேலு (வாழை)
சிறந்த துணை நடிகை: துஷாரா விஜயன் (வேட்டையன்)
பிடித்தமான நடிகை: அன்னா பென் (கொட்டுக்காளி)
சிறந்த துணை நடிகருக்கான விருது : லப்பர் பந்து (தினேஷ் )
சிறந்த பொழுது போக்கு திரைப்படத்திற்கான விருது: வேட்டையன்
பிடித்தமான நடிகர் விருது : அரவிந்த் சாமி(மெய்யழகன் )
இதையும் படியுங்க: சம்பவம் செய்தாரா வெற்றி மாறன்…விடுதலை-2 விமர்சனம் இதோ..!
சிறந்த இயக்குனர் விருது
பா. ரஞ்சித் (தங்கலான்)
சமூகச் சிறப்பம்ச படத்திற்கான விருது
நந்தன் – இயக்குனர் இரா. சரவணன்
ஜூரி விருதுகள்
சிறந்த திரைப்படம்: ஜமா (பாரி இளவழகன்)
நடிப்பு சிறப்பு விருது: யோகி பாபு (போட்)
வழிகாட்டும் படம்: மாரி செல்வராஜ் (வாழை)
இந்த விருதுகள் மூலம் தமிழ் சினிமா அடுத்தகட்டத்துக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.