கடற்கரை காவல் நிலையத்தில் இசைவாணி.. 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Author: Hariharasudhan
14 December 2024, 3:58 pm

தன்னைப் பற்றியும், தனது சாதியைப் பற்றியும் அவதூறாகப் பேசுவதாக பாடகி இசைவாணி அளித்த புகாரில் சென்னை வடக்கு கடற்கரை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை: சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்த பிரபல கானா பாடகி இசைவாணி, சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னைப் பற்றியும், தான் சார்ந்த சாதியைப் பற்றியும் அவதூறாக சிலர் பேசுவதாக குறிப்பிட்டு உள்ளார். இதன் பேரில், சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

இசைவாணி விவகாரம்: கடந்த 2019 ஆண்டு, இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மயிலாப்பூரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், ‘ஐ அம் சாரி ஐயப்பா’ (I am sorry Ayyappa) என்ற பாடலை பாடி இருந்தார். தொடர்ந்து, இந்தப் பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடியும் வந்தார்.

இந்த நிலையில், இந்தப் பாடல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. இதனால் இசைவாணியைச் சுற்றி சர்ச்சையும், விமர்சனங்களும் அதிகரித்தன. குறிப்பாக, இந்து மத நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையிலு, ஐயப்பன் கோயில் மரபை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாகவும், இந்து மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

Chennai North beach police case filed on Isaivani complaint

இதனையடுத்து, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இசைவாணி புகார் ஒன்றையும் அளித்திருந்தார். அதில், கானா பாடல்களும், சமூக விழிப்புணர்வு பாடல்களும் தான் பாடி வருவதாக குறிப்பிட்டுள்ள இசைவாணி, கடந்த 2019ஆம் ஆண்டு ‘I am sorry ayyappa’ பாடல்களை பாடியதாகவும், சமூக வலைத்தளங்களில் அந்தப் பாடல் பரவி வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு எண்களிலிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறியிருந்தார்.

இதையும் படிங்க: மாமியார் கண்முன்னே மருமகள் செய்த காரியம்.. கள்ளக்காதலன் போலீசில் சரணடைந்ததன் பின்னணி என்ன?

மேலும், தன்னுடைய புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைத்தளங்களில் சமூக விரோதிகள் பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதேநேரம், பாடல் வெளியாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வேண்டுமென்றே சமூகத்தில் பதட்டம் ஏற்படுத்தவும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தவும் திட்டமிட்டு சிலர் செயல்பட்டு வருவதாக புகாரில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 188

    0

    0

    Leave a Reply