இனிமேல் இங்கு இருந்தால் நமக்கு அசிங்கம்னு வெளிய வந்துட்டேன்: கமல் படத்திலிருந்து விலகியது ஏன்? இயக்குனர் சேரன் விளக்கம்..!

Author: Vignesh
26 December 2022, 5:00 pm

இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மகாநதி. இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சுகன்யா, ஹனிஃபா, பூர்ணம் விஸ்வநாதன், எஸ் ஏ லட்சிமி, ஷோபனா விக்னேஷ் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் தான் நடிகர் சேரன்.

நடிகர் சேரன் கமல்ஹாசன் மீது கொண்ட அதிக அன்பின் காரணமாக ஒருமுறையாவது அவருடன் படத்தில் வேலை பார்த்து விட வேண்டும் என்று தயாரிப்பாளர் பி தேனப்பன் மூலமாக சந்தான பாரதியின் மகாநதி திரைப்படத்தில் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. 60 நாட்கள் நடந்த இந்த படப்பிடிப்பில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக நான் உள்பட 4 பேர் படத்தின் பாதியிலேயே வந்து விட்டோம்.

Cheran- updatenews360 (8)

நாங்கள் அவருடன் சண்டை போட்டது எங்களுடைய அறியாமையினால் தான். ஒரு காட்சியை எப்படி இயக்க வேண்டும் .என ஒரு கலைஞர்கள் பல விதமாக யோசிப்பார்கள் என்பது அப்போது எனக்கு புரியவில்லை. அதே போலத்தான் கே.எஸ் ரவிகுமாருடன் வேலை பார்த்த கமல்ஹசனுக்கு அந்த இடத்தில் கற்பனை திறன் வேறு மாதிரி இருந்தது.

அப்படித்தான் ஒரு காட்சியில் கமல்ஹானும் பூர்ணம் விஷ்வநாதனும் நேப்பியர் பாலத்தில் பேசிக்கொள்ளும் ஒரு காட்சி காலையில் இடம் பெறுமாறு இருந்தது. அப்போது விடியக் காலையில் சூரியனும் வந்தது. உடனே கமல்ஹாசனுக்கு மழையில் வானவில்லில் ஒரு காட்சி எடுக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு தோன்ற ஒருவேளை நாங்கள் இயக்குனராக இருந்தால் அந்த எண்ணம் தோன்றி இருக்கலாம்.

Cheran_BiggBoss-updatenews360

இதற்கு பிறகு கமல்ஹாசன் காட்சிக்கு தயார் செய்து விட்டு திரும்பி பார்த்தால் கேமெரா மேனை காணவில்லை. கேமிரா மேன் கேமிராவை அண்ணா சமாதி பக்கம் இருக்கும் வேனில் வைத்துக்கொண்டார். கமல் கேமெரா எங்கே என கேட்க நாங்கள் வண்டிக்கு சென்று விட்டது என சொல்ல. கமல்ஹாசனுக்கு சரியான கோபம் வந்துவிட்டது, உடனே நாங்கள் கேமெராவை கொண்டுவர சொல்ல அவர் தரமாட்டேன் என்று கூறினார். பின்னர் எப்படியோ அடித்து புடித்து கேமராவை கொண்டுவந்தால் மழை நின்று விட்டது வானவில் காணாமல் போய் விட்டது.

KAMAL HAASAN_updatenews360

இதனால் கடுமையான கோவமடைந்த கமல்ஹாசன் எங்களை திட்ட உடனே துணை இயக்குனர் கோவமடைந்து வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். இயக்குனரே சென்று விட்டார் இனிமேல் நாம் இங்கு இருந்தால் நமக்கு அசிங்கம் என எண்ணி என்னுடன் இருந்த 2 பேரும் அங்கிருந்து வந்து விட்டோம். ஆனால் இப்போதுதான் இயக்குநராகிய பிறகு தெரிகிறது துணை இயக்குனர்கள் படும் பாடு என்னவென்று, என்று கமல்ஹசனுடன் நடந்த கசப்பான சம்பவம் குறித்து அந்த பேட்டியில் நடிகர் மற்றும் இயக்குனரான சேரன் கூறியிருந்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 756

    0

    1