ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சுக்கிட்டு.. இத செஞ்சி இருப்பாங்கன்னு எதிர்பார்க்கல.. மனம் திறந்த பிக்பாஸ் பிரபலம்..!

Author: Vignesh
3 August 2023, 3:00 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

meena - updatenews360 3

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

meena - updatenews360 3

கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். அண்மையில் கூட மீனா 40 ஆண்டு கால சினிமா பயணம் குறித்து நடைபெற்ற கௌரவ விழாவில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு அவரை வாழ்த்தினார்கள்.

meena cheran

இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் மீனா குறித்து பேசியபோது, பொக்கிஷம் படத்தில் பத்மபிரியாவுக்கு வாய்ஸ் கொடுக்க மீனா பொருத்தமாக இருப்பார் என எனக்கு தோன்றியது. ஆனால், இன்னும் இரண்டு நாட்களில் மீனாவுக்கு திருமணம் கேட்டால் என்ன சொல்வாரோ? என தயங்கிக்கொண்டே போன் செய்தேன். அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் நாளை திருமணத்தை வைத்துக்கொண்டு அதற்கு முன் தினம் டப்பிங் பேசி முடித்துவிட்டு சென்று திருமணம் செய்துகொண்டார். தொழில், வேலை விஷயத்தில் மீனா அவ்வளவு அக்கறை உள்ளவர் என பெருமையாக பேசினார். இதை கேட்டு மீனாவின் ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 320

    0

    0