பிரபல நடிகர் விமலுக்கு நெஞ்சு வலி? மருத்துவமனையில் திடீர் அனுமதி : உடல்நலம் குறித்து விளக்கம்!!!

அதன் பின்னர் சற்குணம் இயக்கிய ‘களவாணி’ திரைப்படம் விமலுக்கு மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் தனக்கே உரிய இயல்பான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால் எதார்த்த நாயகனாகவும் பக்கத்து வீட்டு பையனாகவும் அனைவரையும் கவர்ந்தார் நடிகர் விமல்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கிராமத்துக் கதைகள் மற்றும் நகர கதைகளில் நடித்த விமல், காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட் திரைப்படங்களிலும் நடித்தார்.

களவாணி படத்துக்குப் பிறகு மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தூங்கா நகரம், தேசிங்கு ராஜா மற்றும் கலகலப்பு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார். அதைபோலவே நடிகர் விமல் நடித்த வாகை சூட வா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விமல் சில படங்களைத் தயாரித்தும் அதில் நடித்தார்.

சமீபத்தில் ஜி 5 ஓடிடி தளத்தில் விமல், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் ரிலீஸானது. இந்த வெப் தொடரை புருஸ் லி படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பரவலான நல்ல கவனத்தைப் பெற்றது‌.

விமல் அடுத்ததாக இயக்குனர் அப்துல் மஜீத் இயக்கத்தில் நடித்து வருகிறார். 2002-ல் தளபதி விஜய் நடித்த “தமிழன்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அப்துல் மஜீத். இது போக துடிக்கும் கரங்கள் என்ற படத்திலும் விமல் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சதீஷும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேலுதாஸ் இயக்க, மணிஷர்மா இசையமைக்கிறார்.

இந்நிலையில் விமல் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின. இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகர் விமல், தன் சமூக வலைதளப் பக்கத்தில், ‛நலமுடன் படப்பிடிப்பில் இருந்து’ என வீடியோ வெளியிட்டுள்ளார்.‌

மேலும் வீடியோவில் தோன்றி, “செய்தி கேட்டேன். எனக்கு நெஞ்சு வலி, மருத்துவமனையில் அனுமதி என்று. அதெல்லாம் கிடையாது நான் நலமாக இருக்கிறேன்.

புதுமுக இயக்குனர் மைக்கேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறேன். இன்னும் 5 நாளில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. இன்னொரு செய்தி பார்த்தேன். நான் மதுவுக்கு அடிமையாகி வீட்டில் ரகசிய சிகிச்சை என்று இதெல்லாம் பார்க்கும் போது காமெடியா இருக்கு.

வேண்டாத விஷக்கிருமிகள் இது போல பண்றாங்க. சின்ன பிள்ளை தனமான வேலைகளை விட்டுட்டு பொழைக்கிற வழிய பாருங்க. நீங்களும் வாழுங்க. மத்தவங்களையும் வாழ விடுங்கள்”. என விமல் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…

4 hours ago

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…

வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…

5 hours ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

6 hours ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

6 hours ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

7 hours ago

This website uses cookies.