‘விடுதலை’ படம் பார்க்க சென்று தியேட்டரில் அடி வாங்கிய சேத்தன்.. நெகட்டிவ் கதாபாத்திரத்தால் வந்த விளைவு..!

Author: Rajesh
9 April 2023, 4:30 pm

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ‘விடுதலை’. எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

vijay sethupathi

திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இனி உருவாகவுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் பேராதரவை தொடர்ந்து படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சூரியின் நடிப்பைத் தொடர்ந்து, இப்படத்தில் சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வந்த சேத்தன் அவர்களின் நடிப்பும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. விடுதலை படத்தில் அந்த கதாபாத்திரத்தை பார்க்கும் எவருக்கும் கோபம் வரும் வகையில் மிகவும் மோசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சேத்தன்.

இந்நிலையில், தனது மனைவி ப்ரியதரிஷினியுடன் படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றுள்ளார் சேத்தன். அப்போது படத்தில் சேத்தன் மோசமான விஷயங்களை செய்யும் காட்சிகள் வரும்போதெல்லாம் அவரை அடித்துள்ளார் அவரது மனைவியும் நடிகையுமான ப்ரியதரிஷினி. இன்னொரு பக்கம் மகளும் திட்டியதாக ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.

viduthalai chetan-updatenews360
  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!