தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. முக்கியமாக திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ரஜினிகாந்தின் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது.
பீஸ்ட் படத்தின் மூலம் நெகட்டிவ் ரிவியூஸ் பெற்ற நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இதனிடையே ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் காவாலா பாடல் ரிலீஸ் ஆனது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுத்தில் அனிருத் இசையில் ஜானி மாஸ்டர் ஸ்டெப்ஸ் போட வெளியான காவாலா பாடலுக்கு தமன்னா டான்ஸ் ஆடி இருந்தார்.
இந்நிலை இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே தமன்னாவின் கவர்ச்சி தான் என ஊருக்குள் பலபேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இப்பாடல் குறித்தும் அனிருத் – நெல்சன் கூட்டணி குறித்து பேசியுள்ள பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ” அனிருத்தும் – நெல்சனும் சேர்ந்து பண்ற பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோக்கள் மிகவும் எரிச்சலூட்டும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார்.
சிவகார்திகேயனின் டாக்டர் படத்தின் செல்லம்மா பாடலுக்கு வெளிவந்த முதல் சிங்கிள் ப்ரோமோ ரசிக்கும்படியாக இருந்தது. ஆனால், அது ஒர்க் அவுட் ஆகிவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக பீஸ்ட் மற்றும் ஜெயிலர் போன்ற ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு ப்ரோமோ பண்றேன்னு சொல்லி சாவடிக்கிறாங்க. அதனால் அந்த பாடலே ரசிகர்களுக்கு பிடிக்காமல் போய்விடுகிறது என கூறி அனிருத்தை மோசமாக விமர்சித்துள்ளார் செய்யாறு பாலு.
இதற்கு கடுப்பாகி பதிலளித்துள்ள நெட்டிசன்ஸ், ” old man think like old man ஆனால் எங்களுக்கு இந்த ப்ரோமோ பிடிச்சிருந்துச்சு ராக்கிங் நெல்சன்” என கமெண்ட் அடித்திருக்கிறார்கள். மற்றொருவர், ” காலம் மாறுது… தம்மன்னா பாடலில் ரஜினி வரும் போது ரசிகர்களே தலைவரே ஓரமா போங்க என்று தான் கமெண்ட் அடிக்கிறார்கள் என கூறியுள்ளார்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.