விஜய் நினைத்திருந்தால் கீர்த்தி சுரேஷ் தான் இப்போ கூட இருந்திருப்பாங்க – மீண்டும் கிசு கிசு கிளறிய பிரபலம்!
Author: Rajesh6 February 2024, 5:10 pm
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய். 90ஸ் முதல் தற்போது வரை எட்டி பிடிக்க முடியாத உச்சத்தில் கொடிகட்டி பறந்து வருகிறார். அப்பா S A சந்திரசேகர் உதவியுடன் அறிமுகம் ஆகி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். பொதுவாக இவரது திரைப்படங்கள் வெளியானாலே ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள்.

கடந்த சில நாட்களாக விஜய் அரசியல் பிரவேசத்தில் படு பிசியாக இருந்து வந்தார். தற்போது புதிய கட்சி துவங்கி அரசியலில் மும்முரமாக இறங்கிவிட்டார். அவர் கடைசி திரைப்படம் தற்போது நடித்து வரும் GOAT படம் தானாம். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர்.
இதனிடையே விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள உள்ளனர் என்றெல்லாம் கூட செய்திகள் வெளியானது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ள பிரபல பத்திரிக்கையாளர் செய்யார் பாலு.

இது முற்றிலும் பொய்யான செய்தி தான். நடிகர், நடிகைகள் குறித்து கிசுகிசுக்கள் வெளியாவதெல்லாம் சகஜம் தான். ஆனால் இதை நிரூபிக்கும் படியான சம்பவமோ நெருக்கமான புகைப்படமோ எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை அந்த கிசு கிசு உண்மையாக இருந்திருந்தால். விஜய் அடுத்ததாக நடித்து வரும் தளபதி 68 திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷையே ஹீரோயினாக போட்டிருப்பாரே அப்படி எதுவும் இல்லை எனவே இது முற்றிலும் என அவர் கூறினார்.