B***-வுடன் வந்த ஜோதிகா.. அப்படி ட்ரெஸ் போட்டா என்ன இப்ப? – சாட்டை எடுத்த பிரபலம்..!

Author: Vignesh
13 August 2024, 2:56 pm

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பிரபல நடிகர் சூர்யாவின் மனைவியாக இருக்கக்கூடிய ஜோதிகா. சினிமாவில் இருந்து விலகி பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில், மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து வருகிறார். பாலிவுட் சினிமாவுக்கு மீண்டும் சென்றதும் பல நிகழ்ச்சிகளுக்கு கிளாமர் ஆடையில் செல்வதை வழக்கமாக்கி உள்ளார்.

சமீபத்தில், நடந்த 69 வது பிலிம் பேர் விருது விழா நிகழ்ச்சிக்கு ஜோதிகா உட்பட பல நடிகைகள் படு கிளாமரில் வந்திருந்ததை பலரும் விமர்சித்தனர். குறிப்பாக, சிவகுமார் வீட்டு மருமகளான ஜோதிகா இப்படியான ஆடை அணிந்து வருவது பற்றி இணையதளத்தில் பலவிதமான கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. ஆனால், இது குறித்து பேசிய பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஊருக்கு தகுந்தார் போல் உடைய அணிய வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப தான் ஜோதிகா அந்தந்த சினிமா வளையத்திற்கு ஏற்ப ஆடை அணிந்து செல்கிறார்.

அதை இவ்வளவு, பெரிய விஷயமாக நாம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. கஜோலும் கங்னாவும் கவர்ச்சியாக ஆடை அணிந்து வந்தார்கள். அவர்களை யாருமே கேள்வி கேட்கலையே ஜோதிகாவை மட்டும் குறிப்பிட்டு கேட்பது என்று எனக்கு புரியவில்லை. ஜோதிகா மும்பையில் பிறந்தவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் தான் தமிழில் முன்னணி நடிகையாக மாறினார். அவருக்கென ஒரு கலாச்சாரம் இருக்கிறது. ஒருமுறை நான் மும்பை செல்ல விமானத்தில் பயணம் செய்த போது சேலையில், இருந்த ஒரு பெண் மும்பை அருகே வந்ததும் பாத்ரூம் சென்று கிளாமரான ஆடை அணிந்து வந்ததும் எனக்கு அதிர்ச்சியானது.

அதற்கு காரணம் மும்பை அப்படியான கலாச்சாரம் கொண்டதால், ஊருக்கு தகுந்தாற்போல் ஆடை அணிந்து செல்கின்றனர். சென்னையில், அப்படியான ஆடை அணிந்து ஜோதிகா சென்றால் நூறு கண்கள் அல்ல ஆயிரம் கண்கள் அவரை நோக்கி வரும். அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி தான் ஜோதிகா நடந்து கொள்கிறார். அது முழுக்க முழுக்க அவரின் உரிமை என்று செய்யாறு பாலு பேசியுள்ளார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!