கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது, நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
வரலட்சுமி சரத்குமார் சரத்குமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இவர் பிஸியாக தமிழ், தெலுங்கு, மொழி படங்கள் நடித்து வருகிறார். இவருக்கு மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுக்கும் கடந்த மார்ச் மாதம் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்களது திருமணம் சமீபத்தில் நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சரத்குமாரின் மகள் வரலட்சுமி திருமணம் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். 90ஸ் சமயத்தில் பீக்கில் இருந்த சரத்குமார் நடிகை நக்மாவுடன் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர், இருவரும் காதலித்து வந்தார்கள். அன்று ரகசிய திருமணம் செய்து நக்மாவுக்கு ஈசிஆர் பகுதியில் வீடு வாங்கி கொடுத்தார் என்றும் கூறப்பட்டது நாட்டாமை நடிகர் என்று அப்போதைய மீடியாக்கள் வெளிப்படையாகவே பேசியது உண்மையா? பொய்யா? என்று தெரிவதற்கு பின் சாயாவுடன் விவாகரத்து பெற்றார்.
இதனையடுத்து, நக்மாவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து பாம்பே பக்கம் செட்டில் ஆகிவிட்டார். அப்போது, முதல் குடும்பம் இருப்பதே யாருக்கும் தெரியாது. அதன் பின் தான் ராதிகாவை திருமணம் செய்தார். தன் தாயை தனியாக விட்டுவிட்டார் என்று நினைத்த வரலட்சுமி அவரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்து தான் சினிமா துறையை தேர்வு செய்தார்.
அப்போது, ஷங்கரின் பாய்ஸ் படத்தில் சரத்குமார் மகள் வரலட்சுமியை தேர்வு செய்திருந்தார்களாம். இடையில், சரத்குமாருக்கு இந்த விஷயம் தெரிந்தது. அதை தடுத்து, நிறுத்திவிட்டு அதற்க்கு பின்னர் தான் ஜெனிலியாவை அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த கோவமும் வரலட்சுமிக்கு அதிகமாகி போடா போடி படத்தில் நடிக்க அவரே சென்று வாய்ப்பு வாங்கியிருக்கிறார் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு தனியார் சேனலில் வரலட்சுமி நடித்த பாலாவின் தாரை தப்பட்டை படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கியபோது, அந்த விருதை தன்னுடைய அம்மாவின் கையால் பெற வேண்டும் என்று அவரையும் அழைத்து சென்றிருந்தார். அப்போது, மேடையில் இருந்த பாலா நடிகை வரலட்சுமியின் அம்மா சாயா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருப்பார். இதற்கு காரணம், அம்மா போல் நினைத்துதான் காலில் விழுந்தேன் என்று பாலா பேட்டியில் கூட தெரிவித்து இருந்தார் என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.
இந்த செய்தியில் குறிப்பிட்டு உள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய செய்யாறு பாலுவின் தனிப்பட்ட கருத்துக்களாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே, இந்த தகவலுக்கும் அப்டேட் நியூஸ் 360 இணையதளத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.