இந்த லொள்ளு வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத.. பிரபல நடிகருக்கு கண்டிஷன் போட்ட நயன்தாரா..!

Author: Vignesh
1 August 2024, 5:51 pm

பத்து ஆண்டுகளுக்கு மேல் தனது சினிமா மார்க்கெட்டை நிலை நிறுத்தி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு, முதல் படமே அமோக வரவேற்பை கொடுத்தது. முன்னதாக, கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக ஜொலித்து வரும் நயன்தாராவுக்கு ஆரம்பத்தில் இருந்தே பல கிசுகிசுக்கள் இருந்து வந்தது.

இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சிவகார்த்திகேயன் குறித்தும் நயன்தாரா குறித்தும் பேசியுள்ளார். அதில், அவர் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் நடிக்க நயன்தாரா நிறைய கண்டிஷன் போட்டார்.

ஸ்ரீதிவ்யா போல என்னை நடத்தக்கூடாது. ஊதா கலரு ரிப்பன் போன்ற பாடல்களை வைத்து நக்கல் செய்யவோ, நையாண்டி செய்யவோ கூடாது. என்னை லேடி சூப்பர் ஸ்டார் போல காட்ட வேண்டும் என எக்கச்சக்க கண்டிஷன் போட்டதாக தகவல்கள் அப்போதே வெளியானது.

அதன் பின்னர், தான் மிஸ்டர் லோக்கல் படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தில் நயன்தாராவிடம் நடந்து கொண்ட விதம், பணிவு தான் எல்லாத்துக்கும் காரணம் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!