எல்லா ஏரியாவிலும் கில்லி.. இத்தனை கோடிக்கு அதிபதியா உதயநிதி ஸ்டாலின்?

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2024, 5:40 pm

சினிமாவில் கால் பதித்து அரசியலில் வெற்றி பெற்ற பிரபலங்களில் முத்திரை பதித்தவர் கலைஞர் கருணாநிதி. இவரின் பேரன் என சினிமாவில் நுழைந்தவர் உதயநிதி ஸ்டாலின்.

தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்தும், விநியோகமும் செய்து வருகிறார்.

இதையும் படியுங்க: சமந்தாவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டிய நாகர்ஜூனா.. பச்சைக் கொடி காட்டிய நெட்பிளிக்ஸ்!

பின்னர் ஒரு காதல், ஒரு கண்ணாடி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான உதயநிதி, தொடர்ந்து கதிர்வேலன் காதல், நண்பேன்டா, நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன், மாமன்னன் போன்ற படங்களில் நடித்தார்.

Udhayanidhi Last Movie Mamannan

தயாரிப்பாளர், நடிகர் என அனைத்திலும் வெற்றி கண்ட உதயநிதி அரசியலில் நுழைந்தார். 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார், பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்ட அவர் அமைச்சராக பொறுப்பேற்றார்.

தற்போது துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருடைய சொத்துமதிப்பு குறித்து தகவல் வெளியாகியுளள்து. அவர் ₹80 கோடிக்கு சொந்தக்காரர் என கூறப்படுகிறது.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 152

    0

    0