‘வாழ்த்துக்கள் வைரமுத்து சார்’… நெட்டிசன் போட்ட பதிவு : கொதித்த சின்மயி.. அருவருக்கத்தக்க வார்த்தையில் ட்விட்டரில் ரிப்ளை!!
Author: Udayachandran RadhaKrishnan21 October 2022, 5:51 pm
பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை 2014-ல் திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் வணக்கம் சென்னை படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார்.
மேலும் அவர் மாஸ்கோவின் காவிரி படத்தில்தான் அறிமுகமாகியிருந்தார். இந்த நிலையில் திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு சின்மயிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.
ஒரு பெண், ஒரு ஆண் என பிறந்த குழந்தைகளுக்கு ட்ரிப்டா மற்றும் ஷ்ரவாஸ் என்ற பெயர்களை இன்ஸ்டகிராமில் அறிவித்திருந்தார் சின்மயி.
ஆனால் அவர் கர்ப்ப காலத்தில் எந்த படத்தையும் பதிவிடவில்லை என்பதால், சின்மயி வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து பதிலடி தரும் விதமாக 32-வது வார கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்தார் சின்மயி. மேலும் தாய்ப்பாலும் ஊட்டும் போட்டோக்களையும் பகிந்திருந்தார்.
இதற்கு ரிப்ளை செய்த நெட்டிசன் ஒருவர், வாழ்த்துகள் வைரமுத்து சார் என குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்து எரிச்சலடைந்த சின்மயி, பதிலடி கொடுக்கும் விதமாக “இந்த புகைப்படத்தை நான் பதிவிட்டேன்.
இதற்கு தமிழர் ஒருவர் இதனை பதிவிட்டுள்ளார். நான் எனது கர்ப்பக்கால புகைப்படத்தை வெளியிடாததற்கு உண்மையான காரணம் இருக்கிறது. எனக்கு ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டதால் தான் புகைப்படத்தை வெளியிடவில்லை. என்னை துஷ்பிரயோகம் செய்தவர் என் குழந்தைகளின் தந்தை என்று கூறுகிறார். நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். ரத்தத்துலயே ஊறுனது, வளர்ப்பும் அப்படி” கொந்தளித்துள்ளார்.