வைரமுத்து Uncle மேலே இருந்த பயம் போயிடுச்சா? இரட்டை குழந்தைகளை காட்டிய சின்மயி – நெட்டிசன்ஸ் கேள்வி!

Author: Shree
19 June 2023, 7:54 pm

பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி, நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை 2014-ல் திருமணம் செய்து கொண்டார்.

ரவீந்திரன் வணக்கம் சென்னை படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருப்பார். மேலும் அவர் மாஸ்கோவின் காவிரி படத்தில் தான் அறிமுகமாகியிருந்தார்.

சின்மயில் பின்னணி பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் தமிழ், தெலுங்கில் பல்வேறு பாடல்கள் பாடியிருக்கிறார்.

கன்னத்தில் முத்தமிட்டாள் பாடலை பாடி அறிமுகமான சின்மயி தொடர்ந்து பல்வேறு ஹிட் பாடல்களை பாடி பிரபலம் ஆனார்.

இவர் தெலுங்கு நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு சின்மயிக்கு ஒரு பெண் ஒரு ஆண் என வாடகை தாய் முறையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இதுவரை தன் குழந்தையின் முகத்தை மீடியாவுக்கு காட்டாமல் இருந்து வந்தார்.

காரணம் வைரமுத்துவால் நான் நிறைய தொல்லைகளையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டு நிம்மதியற்ற வாழ்க்கையை கொஞ்சநாள் வாழவேண்டியதாயிற்று. இது போன்ற ஆட்களிடம் என் குழந்தைகளும் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காக தான் என சின்மயி கூறிவந்த நிலையில்,

தற்போது முதன்முறையாக தனது இரட்டை குழந்தைகளின் கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் சிலர், என்னமா சின்மயி வைரமுத்து ஆங்கில் மேலே இருந்த பயம் போயிடுச்சு போல என நக்கல் அடித்து வருகின்றனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!