வைரமுத்துவை தொடர்ந்து பிரபல பாலிவுட் பாடகர் குறித்து பகீர் கிளப்பிய சின்மயி!

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா துறையில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள்.

பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் வருகின்றனர். தொடர்ந்து சின்மயி அவரை விமர்சித்து தான் வருகிறார். ஆனால், வைரமுத்து அதையெல்லாம் பெரிதுபடுத்திக்கொள்வதில்லை.

பாடகி சின்மயி வைரமுத்துவை தொடர்ந்து தற்போது பிரபல பாலிவுட் பாடகர் ரஹத் ஃபதே அலிகான் குறித்து பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். அதாவது பிரபல பாடகர் ரஹத் ஃபதே அலி கான், மது பாட்டிலை கொண்டு தனது வேலைக்காரரை அடித்த வீடியோவை பகிர்ந்து,

இவர்களில் சிலர் பொது வெளியில் மிகவும் மென்மையாகவும், சாதுவாகவும் பேசும் உள்ளம் கொண்டவர்களாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற நடத்தையில் ஈடுபடுவார்கள் என்று யாரும் நினைக்க மாட்டார்கள்.

முன்பெல்லாம் கேமராக்கள் இருந்திருந்தால் குரு என்கிற பெயரில் இவர்கள் செய்யும் அராஜகங்கள் வெட்டவெளிச்சமாகியிருக்கும். இவர்களின் படைப்பாற்றல் திறமைகளுக்கு பின்பாக இவர்களின் வன்முறை மனங்கள் ஒளித்து வைக்கப்படுகின்றன” என்று சின்மயி பதிவிட்டுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…

44 minutes ago

தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!

காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…

1 hour ago

டி.ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு…ஆளே அடையாளம் தெரியல..வைரலாகும் போட்டோ.!

டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…

2 hours ago

வெறி நாய் கடிக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் உயிரை மாய்த்த சோகம் : கோவை அரசு மருத்துவமனையில் ஷாக்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…

3 hours ago

பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் ரெடி மாமே…வெளிவந்த குட் ‘பேட் அக்லி’ அப்டேட்.!

பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…

3 hours ago

விஜய்யிடம் பேசுவது இல்லை.. அவர் படத்தை பார்ப்பதும் இல்லை : பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்!

நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…

4 hours ago

This website uses cookies.