முதல்முறையாக திரிஷாவின் உதடுக்கு ஏற்ப அதை செய்தேன்.. உண்மையை வெளியிட்ட பிரபலம்..!
Author: Vignesh20 February 2024, 5:48 pm
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர். ஆனால் திரிஷாவோ சிம்பு மற்றும் ராணாவை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்.
இதனிடையே, வீட்டில் பார்த்த மாப்பிள்ளை வருண் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று பின்னர் நின்றுபோனது. இதனால் திருமண வாழ்க்கையே இப்போதைக்கு வேண்டாம் என ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.
பல வருடங்களுக்கு பின்னர் 96 திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதைடுத்து வாய்ப்புகள் குவியத்துவங்க தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக நடிகர் அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார்.
சரித்திர திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் திரிஷா வீர பெண்மணியாக, பயங்கரமான ஆக்ஷன் ரோலில் நடிக்க உள்ளாராம். இதற்காக அவர் குதிரையேற்றம், களரி சண்டை உள்ளிட்ட பயிற்சியில் மும்முரமாக இறங்கியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில், 96 படத்தின் பாடல் ஒளிப்பதிவின் போது நடந்த விஷயத்தை பிரபல பாடகி சின்மயி பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் 96 படத்தின் தென்றல் வந்து தீண்டும்போது என்ற பாடலை படமாக்கும் போது திரையில் ஓடவிட்டு திரிஷாவின் உதட்டு அசைவுக்கு ஏற்ப பாடியதாகவும், அவரது உதட்டுக்கு ஏற்ப பாடுவது சவாலாக இருந்தது என்று சின்மயி தெரிவித்துள்ளார்.