பொண்ணு வயசு இருக்கிற நடிகை கிட்ட இந்த மாதிரி நடந்துக்கலாமா?.. சூப்பர் ஸ்டாரை வெளுத்து வாங்கிய ஸ்ரீ ரெட்டி..!

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழியில் முன்னணி நடிகையாக தற்போது கீர்த்தி சுரேஷ் ஜொலித்து வருகிறார். இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறார். அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. மாமன்னன் படத்தை தொடர்ந்து கண்ணிவெடி என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவி இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நடிப்பில், ஆகஸ்ட் 11ஆம் தேதி போலோ ஷங்கர் படம் திரைக்கு வர உள்ளது. இந்த படம் அஜித் நடித்த வேதாளம் ரீமேக். இப்படத்தின் விழா ஒன்றில் கீர்த்தியை பற்றி புகழ்ந்து பேசுகிறேன் என்று அவரை மிக தர்ம சங்கடம் ஆகியுள்ளார் சிரஞ்சீவி. அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலானது.

விழா மேடையில் பேசுகையில், சிரஞ்சீவி இந்த படத்தில் மட்டும் தான் கீர்த்தி சுரேஷ் எனக்கு தங்கச்சி அடுத்த படத்தில் அவர் எனக்கு ஹீரோயினாக நடிப்பார் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, பேசிய ஸ்ரீ ரெட்டி சிரஞ்சீவி கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார். தன்னுடைய மகள் வயதில் இருக்கும் நடிகை மீது ஏன் இப்படி மோகம் கொள்கிறார். இப்படியா பேசுவது என்று கேள்வி எழுப்பியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

6 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

6 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

6 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

8 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

9 hours ago

This website uses cookies.