சூப்பர் ஸ்டாருக்கு அவ்ளோவ் அதுப்பா…? செல்ஃபி கேட்ட ரசிகரை தள்ளிவிட்டு சென்ற வீடியோ இதோ!

Author:
1 August 2024, 12:24 pm

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு நட்சத்திர அந்தஸ்தை பிடித்து இருப்பவர் தான் நடிகர் சிரஞ்சீவி. 68 வயதாகும் இவருக்கு இப்போதும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் உண்டு. திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி அரசியல்வாதியாகவும் இவர் இருந்து வருகிறார்.

பத்மபூஷன் விருது, 7 ஃபிலிம் சார் விருது , தெலுங்கு திரைப்பட விருதுகள், என பல்வேறு விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்ட நடிகராக பார்க்கப்பட்டுவருகிறார். இப்படி நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் சிரஞ்சீவி பொதுவெளியில் மிகவும் மோசமாக இவ்வளவு கீழ் தரமாகவா நடந்து கொள்வது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பும் வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது குறித்த வீடியோ தான் இணையத்தில் வெளியாகி வைரலாக நெட்டிசன்ஸ் சிரஞ்சீவியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

அதாவது சிரஞ்சீவியும் அவரது மனைவி சுரேகாவும் விமான நிலையத்தில் உள்ள லிப்ட்டில் இருந்து வெளியேறும் போது அங்கிருந்து இண்டிகோ ஏர்லைன் ஊழியர் ஒருவர் சிரஞ்சீவி உடன் செல்பி எடுக்க. முயல்கிறார். அப்போது சிரஞ்சீவி அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செல்ல… மீண்டும் அந்த ஊழிய சிரஞ்சீவியிடம் செல்பி கேட்க உடனே கடுப்பான சிரஞ்சீவி அந்த நபரை முதுகில் பிடித்து தள்ளி விட்டு செல்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக எங்களைப் போன்ற ரசிகர்களால் தான் நீங்கள் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறீர்கள்… எங்களை உதாசீனப்படுத்தினால் நீங்கள் சினிமாவில் மோசமான நிலையை சந்திக்க நேரிடும் என சாபம் விட்டு வருகிறார்கள்.

ஆனால், இந்த வீடியோவை பார்த்த சிரஞ்சீவி ஆதரவாளர்கள் பலர் நீண்ட நேரம் விமான பயணத்திற்குப் பிறகு மிகவும் சோர்வடைந்து வருவார்கள் அவர்களை இப்படி தொந்தரவு செய்வதே முதலில் தவறு என அவருக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Good Bad Ugly Full Movie Leaked on Net in HD Print இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!