டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு… வாரிசு தயாரிப்பாளரை கலாய்த்த பிரபலம் – விழுந்து விழுந்து சிரித்த கீர்த்தி சுரேஷ், தமன்னா!

Author: Shree
8 August 2023, 5:36 pm

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங், வசூல் சக்கரவர்த்தி என அழைக்கப்படுவது நடிகர் விஜய்யை தான். இவர் படம் எப்போதும் அதிக வசூலை பெறும் என்பது தயாரிப்பாளர்களின் அதீத நம்பிக்கை. அதனால் விஜய் படம் என்றாலே படத்தின் கதையை கூட கேட்காமல் ஒப்புக்கொள்வார்கள் தயாரிப்பாளர்கள். அந்த வகையில் முன்னதாக வெளியான வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் ரூ. 300 கோடி வசூல் செய்ததாக படக்குழுவே அறிவித்தது.

ஆனால் அதெல்லாம் சுத்த பொய் என வாரிசு படத்தை பலரும் விமர்சித்திருந்தார்கள். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. படு மொக்கையாகிவிட்டது என விஜய் ரசிகர்களே அப்செட் ஆகிவிட்டார்கள். இந்த படத்திற்கு தயாரிப்பாளர் தில் ராஜு ஓவர் ஹைப்பர் கிளப்பும் வகையில் ” டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு… fight வேணுமா fight இருக்கு” என பேசியதை வைத்து நெட்டிசன்ஸ் பலரும் கிண்டலடித்து தள்ளினர். இதனால் ஒரு கட்டத்தில் கோபத்திற்கு உள்ளாகி பேட்டி ஒன்றில் கத்திவிட்டார் தில் ராஜு.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் , போலோ சங்கர் படத்தின் ப்ரோமோஷனில் பேசிய நடிகர் சிரஞ்சீவி , ஃபைட் இருக்கு டான்ஸ் இருக்கு காமெடி இருக்கு ரொமான்ஸ் இருக்கு என்றெல்லாம் அடுக்கடுக்காக சொல்லி வாரிசு படத்தை மறைமுகமாக கிண்டல் அடித்தார். இதற்கு தமன்னா மற்றும் கீர்த்தி சுரேஷ் விழுந்து விழுந்து சிரித்தனர். தற்போது இந்த வீடியோ ரஜினி ரசிகர்களிடம் சிக்க… சார் இங்க வாங்க நீங்க தான் அந்த சூப்பர் ஸ்டார் பட்டம் கேட்டதா? என விஜய்யை பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளனர். இதோ அந்த வைரல் வீடியோ:

  • goundamani does not eat in home said by bayilvan கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…