நீயெல்லாம் மன்சூர் அலிகான் பற்றி பேசலாமா? கீர்த்தி சுரேஷிடம் அப்படி நடந்துக்கொண்ட சிரஞ்சீவி!

Author: Shree
22 November 2023, 10:37 am

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாகவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.

இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ படத்தில் வில்லனாக நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து மிகவும் கொச்சையாக முகம் சுளிக்கும் வகையில் பேசியுள்ளார். அதாவது லியோ படத்தில் வில்லனான என்னை திரிஷாவை கற்பழிக்கவே விடல… காஷ்மீர் பணியில் அவரின் பஞ்சு மேனி பார்க்கவே ரொம்ப அழகா இருந்தது.

திரிஷாவை கட்டிலில் தூக்கிப்போட்டு அவரை கற்பழிக்கும் சீன் பண்ணனும்னு எனக்கும் ஆசையா இருந்துச்சு என்றெல்லாம் கொச்சையாக முகம் சுளிக்கும் வகையில் பேசி ஒட்டுமொத்த திரையுலத்தையே தலைகுனிய வைத்துள்ளார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு பலதரப்பினர் கடும் கண்டனம் தெரிவிக்க அவருக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும் என பலர் கொந்தளித்தனர்.

அந்தவகையில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சிரஞ்சீவி தமிழ் நடிகைகளான கீர்த்தி சுரேஷ், தமன்னா உள்ளிட்டோரிடம் மிக மோசமாக நடந்துக்கொண்ட வீடியோக்கள் வெளியாகி முகம் சுளிக்க வைத்துள்ளது. எனவே நீயெல்லாம் மன்சூர் அலிகான் விஷயத்தில் நியாயம் பேசுவது சரியில்லை. தமிழ் நடிகர்கள் பற்றி பேசுவதற்கு நீ யார்? என்றெல்லாம் கோலிவுட் ரசிகர்கள் சிரஞ்சீவியை ஒருமையில் திட்டி தீர்த்துள்ளனர்.

  • Trisha emotional Instagram post நீ இல்லாமல் நான் எப்படி வாழ…மனம் உடைந்த திரிஷா…வைரலாகும் பதிவு…!
  • Views: - 327

    0

    0