மிஷ்கின் மாதிரி ஒரு பொறுப்புள்ள இயக்குனர் இப்படி செய்யலாமா..? பிரபல தயாரிப்பாளர் அட்வைஸ்..!

Author: Vignesh
1 February 2023, 1:25 pm

சமீப காலமாக இயக்குனர் மிஷ்கின் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களை பல விழா மேடைகளில் விமர்சிக்கும்போது, சம்பந்தப்பட்டவர்களை ஒருமையில் பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

விஷாலுக்கும் மிஷ்கினுக்கு இடையே, சில வருடங்களுக்கு முன்பு “துப்பறிவாளன் 2” திரைப்படத்தில் சில சச்சரவுகள் எழுந்தன.

Mysskin - Updatenews360

ஒரு திரைப்பட விழாவில் மிஷ்கின் விஷாலை குறிப்பிட்டு பேசியபோது:- “விஷால் ஒரு பொறுக்கி. அவனுக்கு சினிமாவை பற்றி என்ன தெரியும்?” போன்ற தகாத வார்த்தைகளால் விஷாலை சாடினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும் சமீபத்தில் “கலகத் தலைவன்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் “குட்டி சுவராக போன ராஜேஷ் போன்ற இயக்குனர்” என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தியது. அங்கே இருந்தவர்களிடம் இது பெரும் வருதத்தை ஏற்படுத்தியது. இதனால், இணையத்தில் பலரும் மிஷ்கினின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

mysskin - updatenews360

மேலும், இயக்குனர் மிஷ்கின் தனது பேட்டிகளில் பல இயக்குனர்களையும் நடிகர்களையும் வாடா போடா என்று ஒருமையில் பேசுவது அனைவரிடத்திலும், அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒருமையில் பேசுவது இயக்குனர் மிஷ்கினின் வழக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்நதார் அதில், “இயக்குனர் மிஷ்கின் ஏன் பொது மேடைகளில் எல்லாரையும் ஒருமையில் வாடா போடா என பேசுகிறார்? எனவும், அவருக்கு நடிகர் சங்கத்தில் இருந்து எச்சரிக்கை கொடுக்க வாய்ப்பு இருக்கா?” என்று ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.

Chitra Lakshmanan - updatenews360

அந்த கேள்விக்கு பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் “இந்த விசயத்தில் நடிகர் சங்கம் தலையிட்டு எந்த அறிவுரையும் மிஷ்கினுக்கு கூறமுடியாது என்றும், ஆனால் மிஷ்கினால் இது போன்று பேசுவதை தவிர்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன்” என பதில் கூறியுள்ளார்.

மேலும் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் பேசியதாவது “மிஷ்கினை பொறுத்தவரைக்கும் அவர் ஒரு பொறுப்புள்ள இயக்குனர் என்றும், அப்படிப்பட்டவர் பொது மேடைகளில் மற்ற நடிகர்களையும் இயக்குனர்களையும் ஒருமையில் பேசுவது அவ்வளவு நாகரீகமாக இல்லை என்பதை மிஷ்கின் உணர்ந்தால் நன்றாக இருக்கும்” என தெரிவித்திருந்தார்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 501

    0

    0