அதட்டி சொன்ன இளையராஜா.. வேறு வழி இல்லாமல் அட்ஜஸ்ட் செய்த சித்ரா..!
Author: Vignesh26 June 2023, 5:00 pm
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை கே.எஸ்.சித்ரா என்ற கிருஷ்ணன் நாயர் சாந்த குமாரி சித்ரா பூர்வீகமாக கொண்டவர். பின்னணி பாடகரான இவர் இந்தியா முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இதனாலேயே பாடகி சித்ராவை ரசிகர்கள் சின்னக்குயில் சித்ரா என அன்புடன் அழைக்கின்றனர். பாடகி சித்ரா தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமி, வங்காளம் உள்பட பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி வருகிறார்.
பாடகி சித்ரா ஆறுமுறை தேசிய விருதுகளையும், ஆறு முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். அத்துடன் இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷண் விருதையும் பாடகி சித்ரா பெற்றுள்ளார்.
கடந்த 1988-ம் ஆண்டு பாடகி சித்ரா விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2002-ம் ஆண்டு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில், 2011-ம் ஆண்டு நந்தனா நீச்சல் குளத்தில் தவறிவிழுந்து மரணமடைந்தார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில், சித்ரா மனம் திறந்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது சிந்து பைரவி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நான் ஒரு சிந்து காவடி சிந்து பாடல் பாட இளையராஜா தன்னை அழித்ததாகவும், தானும் அந்த பாடலை பாடி முடித்துவிட்டு அன்று மாலை ஊருக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தாராம்.
தனக்கு அடுத்த நாள் எம்.ஏ முதலாமாண்டு பரீட்சை இருந்ததாகவும், தான் கிளம்பிக் கொண்டிருந்த சமயத்தில், ராஜா சார் தனக்கு கால் செய்து இன்னொரு பாடலை பாடி தருமாறு கேட்டதாகவும், ஆனால் தன்னுடைய தந்தை பரிச்சை மிக முக்கியம் என்று கூறி மறுத்துவிட்ட நிலையில், இதை தான் ராஜா சார் கிட்ட சொன்னபோது அவர் பரிச்சை அப்புறம் பார்த்துக்கலாம் என கூறிவிட்டதாகவும், அவரின் பேச்சை மீற முடியாத கட்டாயத்தில் தான் பரீட்சை எழுதாமல் பாடல் பாட சென்று விட்டேன். இவ்வாறு தான் பாடகியாக தன்னுடைய பயணத்தை தொடங்கியதாக சின்ன குயில் சித்ரா தெரிவித்திருக்கிறார்.