மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?
Author: Prasad4 April 2025, 1:48 pm
வித்தியாசமான கதைக்களம்
சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின் கெரியரில் வித்தியாசமான திரைப்படமாக அமைந்தது. அதுமட்டுமல்லாது இத்திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாகவும் அமைந்தது.

இதில் சிவகார்த்திகேயன் காதுகளுக்கு மட்டும் ஒரு அசரீரி குரல் கேட்க அந்த குரல் சொல்வதை அவர் யதேர்ச்சையாக பின்பற்றுவது போன்ற காட்சிகளில் சிவகார்த்திகேயனின் நடிப்பு அபாரமாக இருந்தது. மேலும் மிஷ்கினின் வில்லத்தனமும் வெறித்தனமாக இருந்தது. இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
விக்ரமுடன் கூட்டணி
“மாவீரன்” திரைப்படத்தை தொடர்ந்து சீயான் விக்ரமுடம் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை உருவாக்கவுள்ளார் மடோன்னே அஸ்வின். இத்திரைப்படத்தின் டிஸ்கஷன் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்திற்கு “வீரமே ஜெயம்” என்று டைட்டில் வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

மடோன்னே அஸ்வின் இதற்கு முன்பு இயக்கிய “மாவீரன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “வீரமே ஜெயம்” என்ற வசனம் மிகப் பிரபலமான வசனமாகும். இந்த வசனத்தைத்தான் விக்ரமின் திரைப்படத்திற்கு டைட்டிலாக வைக்க உள்ளனர் என தெரிய வருகிறது.
சீயான் விக்ரம் நடித்துள்ள “வீர தீர சூரன்” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் விக்ரமின் அடுத்த திரைப்படத்திற்கும் “வீரமே ஜெயம்” என வீர என்ற வார்த்தையில் தொடங்குவது போல் டைட்டில் வைக்க உள்ளதும் இதில் குறிப்பிடத்தக்கது.