இதை பண்ணியிருக்கக் கூடாது.. மோசமான முடிவால் வருத்தத்தில் நயன்தாரா..!
Author: Vignesh27 June 2024, 9:27 am
பத்து ஆண்டுகளுக்கு மேல் தனது சினிமா மார்க்கெட்டை நிலை நிறுத்தி முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு, முதல் படமே அமோக வரவேற்பை கொடுத்தது. சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தலான நடிப்பையும் கவர்ச்சியும் வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.
இதனைதொடர்ந்து, AR முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் நடிப்பில் உருவான கஜினி படத்தில் நடித்தது குறித்து ஒரு பேட்டி ஒன்றில் பேசிய ஒரு விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது, நடிகை நயன்தாரா கஜினி படத்தில் நடித்தது தான் என்னுடைய வாழ்க்கையில், நான் எடுத்த மோசமான முடிவு அந்த கதாபாத்திரம் குறித்து என்னிடம் சொல்லப்பட்டது போல் அவர்கள் காட்சிப்படுத்தவில்லை. சில இடங்களில் நான் மோசமாக சித்தரிக்கப்பட்டேன். இதைப்பற்றி நான் புகார் கூற விரும்பவில்லை, இதை நான் என் வாழ்க்கையில் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்கிறேன் ஆனால் அந்த படத்தில் நடித்தது குறித்து வருத்தப்படுகிறேன் என நயன்தாரா தெரிவித்துள்ளார்.