புராதன பொருள் மோசடி வழக்கு : பிரபல நடிகர் மோகன்லாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்..!
Author: Rajesh14 மே 2022, 3:38 மணி
கேரள மாநிலம் கொச்சி கலூர் பகுதியை சேர்ந்தவர் தான் மோன்சன். இவர் பழங்கால புராதன பொருள் என்று சொல்லி பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்தார். மேலும், வெளிநாட்டில் புராதன பொருட்களை விற்பனை செய்த வகையில் தனக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வர உள்ளதாகவும் சொல்லி, பலபேரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.இது குறித்து போலீசார் நடத்தி விசாரணை கடந்த வருடம் மோன்சனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பிரபல நடிகர் மோகன்லால் பழங்கால புராதன பொருட்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால், தனது கொச்சி, சென்னை, ஊட்டி, துபாய் உள்பட பல இடங்களிலுள்ள வீடுகளில் பல அரிய புராதன பொருட்களை வாங்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, பல நூறு கோடி ரூபாய் கருப்பு பண மோசடியில் மோன்சன் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து மத்திய அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியுள்ளது. இந்நிலையில், மோன்சனின் மோசடி தொடர்பாக நடிகர் மோகன்லாலிடம் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது. அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் மலையாள படவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0