ஓடி ஓடி போய் உதவி செஞ்சியே தலைவா.. உனக்கே இந்த நிலைமையா? விஜயகாந்தை கண்டுகொள்ளாத சினிமா பிரபலங்கள்..!
Author: Vignesh28 December 2023, 10:03 am
தேமுக தலைவர் விஜயகாந்த் இன்று காலமானார். மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
முன்னதாக, விஜயகாந்த்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும், அவர் வீட்டில் இருந்த நிலையில், அவரின் உடல்நிலை குறித்து பல அரசியல் தலைவர்கள் விசாரித்து வந்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி கூட அவரின் உடல் நிலையை குறித்து விசாரித்துவிட்டு சென்றார்.

சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், விஜயகாந்த் உடல்நிலையை கண்காணித்து வந்தார். முதல்வர் ஸ்டாலின் அவர் உடல் நிலையை பற்றி மருத்துவர்களிடம் விசாரித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜிகே வாசன், அமமுக செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விஜயகாந்த் உடல்நடையை பற்றி அவரின் குடும்பத்தினரும் விசாரித்ததோடு அவர் குணமடைய வேண்டி வந்தனர்.
இந்நிலையில், சினிமா துறையினர் பலரும் விஜயகாந்த்தின் உடல்நிலை பற்றி விசாரிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, சினிமாவில் அவருக்கு நெருக்கமாக இருந்த பலரும் கூட அவரின் உடல்நிலையை பற்றி விசாரிக்கவில்லையாம். ஏன் ஒரு டுவிட் கூட போடவில்லையாம். அவர் வீட்டில் இருந்தபோதும், யாரும் சென்று பார்க்கவில்லையாம். விஜயகாந்த்க்கு என்று சில நற்பண்புகள் இருக்கும். அவர் சினிமாவில் பலரை வாழ வைத்தவர். அவர் படத்திற்கு சூட்டிங் போனால் கண்டிப்பாக உணவிற்கே பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவர் பல ஹீரோக்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர்.
இப்போது, டாப்பில் இருக்கும் ஒரு ஹீரோவிற்கு கூட அவர்தான் அறிமுக நாட்களில் தொடர் ஆதரவு கொடுத்து வந்தார். பல நடிகைகளுக்கு கூட வாய்ப்புகள் கொடுத்தவர் விஜயகாந்த். அதோடு, நிற்காமல் தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கு தலைவராக விஜயகாந்த் செய்த சாதனைகளை யாராலும் மறக்க முடியாது.
சங்கத்தின் கடனை அடைத்தவர் விஜயகாந்த். டாப் ஹீரோக்கள் எல்லோரையும் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி, அதன் மூலம் வருவாய் பெற்று கடனை விஜயகாந்த் அடைத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி இறந்தபோது வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் நேரடியாக ஏர்போர்ட்டில் இருந்து உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடி வந்து அவரின் நினைவிடத்தில் அஞ்சலியும் செலுத்தினார். அப்படி சக உயிர்களை மதித்த விஜயகாந்த் உடல்நிலை பற்றி சினிமா உலகில் டாப் நடிகர்கள் விசாரிக்காமல் அமைதியாக இருப்பது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.