அபிஷேக்வுடன் முத்தி போன சண்டை.. கணவரை பிரியும் ஐஸ்வர்யா ராய்?.. கழுவி ஊற்றும் பிரபலம்..!

Author: Vignesh
29 July 2024, 1:12 pm

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், தன்னுடைய மகள் ஆரத்யாவுடன் மும்பையில் தனியாக வசித்து வருவதாக பல்வேறு செய்திகள் சமீப காலமாக வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த அம்பானியின் மகன் திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தனியாக மகளுடன் பங்கேற்றார். ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மாமியார் குடும்பத்துடன் ஒதுங்கி இருந்த வீடியோக்களும் வெளியாகி வைரலானது.

ஆனால், சமீபத்தில் அபிஷேக் பச்சன் வாங்கிய காரில் ஐஸ்வர்யா ராய்க்கு பிடித்த நம்பர் பிளேட்டை வாங்கி போட்டிருக்கிறார் என்று யோஜன்ஸா என்ற பிரபலம் ஒருவர் செய்திருந்தார்.

சமீபத்தில், பயில்வான் ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சன் பிரிய முக்கிய காரணமே சொத்து பிரச்சனை தான் என்று கூறியிருந்தார். மேலும், அபிஷேக் பச்சன் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாக கூறியிருந்தார்.

மேலும், குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் ஐஸ்வர்யாராய் அபிஷேக் பிரிவுக்கு என்ன காரணம் என்று பேசியுள்ளார்.

அதில், பாலிவுட் நடிகை ரேகாவிடம் ஐஸ்வர்யா ராய் கொண்டிருந்த நட்புதான் இவர்கள் பிரச்சனைக்கு காரணம் என்றும் ரேகா மற்றும் அமிதாப்பச்சன் காதல் விவாகரத்தில் ரேகா மற்றும் ஜெயா பச்சன் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்படி ஒரு நிலையில், ரேகாவுடன் ஐஸ்வர்யா ராய் நட்பு கொண்டிருப்பது குடும்பத்தில் விரிசல்களை ஏற்படுத்தியதாக சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார். ஆனால், ஐஸ்வர்யா இதை மறுத்ததுடன் தன்னுடைய கோபத்தையும் வெளிப்படுத்தினார்.

இருவரும் பிரிவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும், இருவரும் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் பிரிய மாட்டார்கள் இணைந்து வாழும் முடிவெடுப்பார்கள் என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 1826

    0

    0