ஊருக்கு உபதேசம் செய்யறதுக்கு முன்னாடி நீங்க மாறுங்க..- விஜய்க்கு அட்வைஸ் செய்த பிரபலம்..!
Author: Vignesh15 April 2023, 8:00 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தன் அப்பா எஸ்ஏ சந்திர சேகரின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பதி பல கேலி,கிண்டலுக்கு ஆளான விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி திறமைகளை வளர்த்துக்கொண்டு தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இடத்தை பிடித்தார்.

குறிப்பாக இவரது நடிப்பு, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், டான்ஸ் உள்ளிட்டவை ரசிகர்களை உற்சாகப்படுத்தும். முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த லியோ படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

இதனிடையே, சமீபத்தில் விஜய் தனது ரசிகர்களிடம் அம்பேத்கர் பிறந்த நாளில் அவருக்கு மாலை அணிவிக்கும் மாறு தெரிவித்துள்ளார். இதை ரசிகர்களும் அவரின் சொல்லியபடி செய்தனர்.

இந்நிலையில், விஜய் தனது வீட்டில் அம்பேத்கர் போட்டோவை வைத்து ஒரு மாலை கூட போடவில்லை என்றும், ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன்பு நீங்க மாறுங்கள் என பிரபல பத்திரிகையாளர் விமர்சித்துள்ளார்.