வால்யூம் ஏத்துங்க.. தளபதி 68-ல் இரட்டை வேடங்களில் விஜய்.. ஹீரோயின்ஸ் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு..!

Author: Vignesh
21 August 2023, 5:35 pm

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் .

thalapathy 68-updatenews360

இந்த நிலையில் விஜய் நடிக்கும் 68வது படமான தளபதி 68 குறித்து அறிவிப்புகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியானது. வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும், இத்திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் நடிகர்கள் தேர்வும் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

thalapathy 68-updatenews360

அதில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், ஒரு கதாபாத்திரத்திற்கு பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

thalapathy 68-updatenews360

மேலும், கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வரும் சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும், விஜய் வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படம் திரில்லர் வகையில் உருவாகும் என கூறப்படுகிறது. மேலும், இதற்கான படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கலாம் என படக் குழுவினருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 401

    1

    0