நயன்தாராவின் ‘கனெக்ட்‘ படம் வெளியாவதில் சிக்கல்?.. திரையரங்க உரிமையாளர்களின் முடிவால் அதிர்ச்சியில் படக்குழு..!

Author: Vignesh
19 December 2022, 6:00 pm

வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில், உருவாகியுள்ள கனெக்ட்’ படம், வெளியாகவுள்ளது. சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் என பலர் நடித்துள்ள ‘கனெக்ட்’ படம், 99 நிமிடங்கள் ஓடும் எனவும், இப்படத்துக்கு இடைவெளி இல்லை என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

nayanthara - updatenews360.jpg 2

தற்போது கனெக்ட் படம் வெளியாவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தியேட்டரில் படங்களின் இடைவெளியின் போது மக்கள் கேண்டீன்களில் திண்பண்டங்கள் வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

nayanthara - updatenews360.jpg 2

இதனால், திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். இந்நிலையில் இடைவெளி இல்லை என்றால் திரையரங்க உரிமையாளர்களின் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்படும் என்பதால், நயன்தாராவின் கனெக்ட் படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

nayanthara - updatenews360.jpg 2

இதனால் படக்குழுவினர் திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து கனெக்ட் படத்துக்கு இடைவெளி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி