பெயரால் வந்த குழப்பம்… டெரர் வில்லனாக மிரட்டிய பொன்னம்பலத்தின் மகளா இது?..

Author: Vignesh
11 January 2024, 9:43 am

90ஸ் காலகட்டத்தில் தமிழ் திரைப்படங்களின் வில்லன் நடிகராக பெரும் அளவில் பிரபலமானவர் நடிகர் “கபாலி” எனும் பொன்னம்பலம். இவர் மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் நடிக்க துவங்கி செந்தூரப் பாண்டி, நாட்டாமை, கூலி, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

மேலும், சண்டை பயிற்சியாளாகவும் இருந்துள்ளார். இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். அதன் பின் இடியுடன் கூடிய மழை என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

2011 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். அரசியலில் இருந்து விலகி பின்னர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

Ponnambalam-updatenews360

இவருக்கு கார்த்திக் என்ற மகனும் கிருத்திகா என்ற மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில், பொன்னம்பலத்தின் மகளின் புகைப்படம் இணையதளத்தில் அதிகமாக வைரல் ஆனது. இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு இவரின் மகளா இவ்வளவு அழகாக இருக்கிறாரே என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

saranya updatenews360

இந்த நிலையில், விசாரித்ததில் அந்தப் பெண் பொன்னம்பலத்தின் மகள் இல்லை என்றும், அந்த பெண்ணின் பெயர் சரண்யா பொன்னம்பலம் என்றும் தெரியவந்துள்ளது.

saranya updatenews360

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…