“எனக்கு கை,கால் எல்லாம் போச்சு,எதாச்சும் உதவி செய்ங்களேன்!- வீடியோ வெளியிட்ட காமெடி நடிகர்!”

Author:
25 June 2024, 10:07 am

ஒரு ஸ்டண்ட் ஆக்டராக தனது பயணத்தைத் தொடங்கிய வெங்கல் ராவ் ரஜினி,அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபல நடிகர்களுக்கு டூப் செய்தவர். ஸ்டண்ட் செய்யும் போது ஏற்பட்ட விபத்தால் ஸ்டண்ட்டை விட்டுவிட்டு காமெடி நடிகராக தனது பயணத்தை தொடர்ந்தார். இவர் தமிழில் பல்வேறு காமெடி படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் கந்தசாமி என்ற படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த காமெடி மிகவும் ஹிட்டானது. தற்போது அவரை படங்களில் பார்க்க முடியவில்லை என அனைவரும் நினைத்திருப்போம். ஆனால் அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடல்நிலை சரியா இல்லாத நிலையில் அவர் பேசியுள்ள வீடியோவில் “என் ஒரு கை, ஒரு கால் செயலிழந்துவிட்டது. என்னால் நடக்க முடியவில்லை. பேச முடியவில்லை. சினிமா தொழிலாளர்கள், சினிமா நடிகர்கள் இந்த வெங்கல் ராவ்வுக்கு உதவி செய்யுங்கள். மருத்துவ சிகிச்சைக்கு என்னிடம் பணம் இல்லை. இதுக்கு மேல என்னால் பேச முடியவில்லை. எனக்கு உதவி பண்ணுங்க” என கேட்டு கொண்டுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ