சமந்தா கேரியருக்கு END CARD… முத்தக் காட்சியால் மொத்தமும் CLOSE..!!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2024, 5:54 pm

சினிமாவுக்கு சின்ன பிரேக் விட்ட சமந்தா, தற்போது வெப் சீரியஸ் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். உடல்நலக்குறைவு, பெர்சனல் விஷயத்திற்கு பின் சமந்தாவை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்,

சிட்டாடல் 2வது சீசனான சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரியஸின் டிரெய்லர் ரிலீசாகி படுவைரலானது. கவர்ச்சியில் பட்டையை கிளப்பிய சமந்தாவின் வீடியோ வைரலானது.

அதுவும் வருண் தவானுடன் லிப் லாக் அடித்த வீடியோ நேற்று ஒரே நாளில் பயங்கர டிரெண்டானது. இந்த நிலையில் இன்று இந்த வெப்சீரியஸ் வெளியானது.

ஃபன்னியாக வருண் தவான், ஹனியாக சமந்தா நடிக்க, 1992 மற்றும் 2000ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர்களுக்கு டூப் போடும் கதாபாத்திரத்தில் வருண் நடிக்க, துணை நடிகையாக நடித்த சமந்தா மீது காதல் வயப்படுகிறார்.

இதையும் படியுங்க: பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க… வெடித்தது போராட்டம்..!!

சமந்தா தனது மகளை சிம்ரன் குரூப்பிடம் இருந்து காப்பாற்ற போராடுவார். இறுதியில் சமந்தாவும் அந்த குரூப்பிடம் சிக்கிக் கொள்கிறார். இருவரையும் காப்பாற்ற வருண் போராடுகிறார். படத்தின் கதை இதுதான் என்றாலும் அரைதத் மாவையே அரைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்ததுள்ளன.

சமந்தா கம்பேக் கொடுப்பார் என காத்திருந்த ரசிகர்ளுக்கு இது ஏமாற்றமே. ஒடிடியில் வெளியான வெப் சீரியஸ் ஊத்திக் கொண்டதால் சமந்தாவின் கேரியர் கேள்விக்குறியாகியுள்ளது.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 236

    0

    0