படத்திற்கு படம் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். என் காதல் கண்மணி படத்தின் மூலம் 1990ல் அறிமுகமானார்.
அதன் பின்னர் தொடர்ந்து பல தோல்வி படங்களில் நடித்து துவண்டுபோன விக்ரமுக்கு சேது படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் காசி, ஜெமினி, தூள் , பிதாமகன் , அந்நியன் , தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
படத்திற்கு படம் தனது முழு உழைப்பை போட்டு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்திற்காக தனது இயக்குனர் எப்படி கேட்கிறாரோ அப்படி உடலை வருத்தி திறமையான நடிகராக பார்க்கப்படுபவர் விக்ரம். திரைத்துறையில் போட்டிகள் பொறாமைகள் இன்றி ஜீரோ ஹேட்டர்ஸ் என்ற பெயரெடுத்திருக்கிறார்.
இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் விக்ரம் ஆரம்ப காலத்தில் படவாய்ப்பிற்காகவும், தனது திறமையை வெளிப்படுத்தவும் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அப்போது தனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் வாய்ப்பு கேட்டு கெஞ்சியுள்ளார். அப்டித்தான் பாலா தனது நெருங்கிய நண்பர் என்பதால் அவரது இயக்கத்தில் வாய்ப்பு கேட்டு சேது, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
இதில் பிதாமகன் படத்தில் சூர்யா விக்ரமுடன் சேர்ந்து நடித்திருப்பார். அப்படத்தில் சூர்யாவின் சில முக்கியமான காட்சிகளை நீக்க சொல்லி நண்பர் பாலாவிடம் கேட்க அவரும் சூர்யாவின் காட்சிகளை நீக்கிவிட்டாராம். இதனால் விக்ரம் மீது சூர்யா கடுங்கோபத்தில் இருந்தாராம். அதனால் தான் தன் திருமணத்திற்கு கூட விக்ரமை கூப்பிடவே இல்லையாம் சூர்யா.
சூர்யா தன் மீது கோபமாக இருப்பதை சுதாரித்துக்கொண்ட விக்ரம் தன் படங்களில் ஜோதிகாவை நடிக்க வைத்து ஹிட் கொடுத்தாராம். ஆனாலும், அவர் மீதுள்ள கோபம் சூர்யாவுக்கு குறையவே இல்லையாம். பின்னர் காலங்கள் செல்ல செல்ல இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தார்களாம்.
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
நிதியைக் கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை, வாங்க வேண்டியது இவர்களின் உரிமை என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.…
குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி…
This website uses cookies.