அமரன் படத்தால் நிம்மதி போச்சு.. ரூ.1.1 கோடி இழப்பீடு கேட்கும் கல்லூரி மாணவர்!

Author: Hariharasudhan
21 November 2024, 1:27 pm

அமரன் படத்தில் இடம்பெற்றுள்ள தன்னுடைய மொபைல் எண்ணால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ள மாணவர், நஷ்ட ஈடாக ரூ.1.1 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

சென்னை: கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படம் அமரன். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் வெளியான இப்படம் 20 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இதுவரை 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படம் சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் முக்கிய திருப்பமாக அமைந்து உள்ளது எனலாம்.

இந்த நிலையில், அமரன் படத்தில் இடம் பெற்று இருக்கும் மொபைல் எண் தன்னுடையது எனக் கூறி உள்ள சென்னை பொறியியல் கல்லூரி மாணவர் வாகீசன், இதனால் தனக்கு பல போன் கால்கள் (Phone Calls) மற்றும் மெசேஜ் வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், “தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட நினைத்தபோது எனக்கு போனில் அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. யார் யாரோ எனக்கு போன் செய்தனர். அப்போது, எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன் பிறகு தான் எனக்கு தெரிய வந்தது, என் போன் நம்பர் அமரன் படத்தின் ஒரு காட்சியில் பயன்படுத்தப்பட்டது என்று.

ஆனால், தொடர்ந்து எனக்கு போன் கால்கள் மற்றும் மெசேஜ் வருவது நிற்கவே இல்லை. எனவே. போனை சுவிட்ச் ஆப் செய்தேன். அவசரமாக கால் செய்ய போனை ஆன் செய்தாலும், என்னால் ஒரு கால் கூட பண்ண முடியவில்லை. அந்த அளவிற்கு எனக்கு போன் கால்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

SAI PALLAVI MOBILE NUMBER IN AMARAN MOVIE

ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து எனக்கு கால் செய்தும், மெசேஜ் செய்தும் உள்ளனர். இதனால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் கார்டு போன்ற விஷயங்களில் இந்த நம்பரைத் தான் நான் இணைத்து உள்ளேன். எனவே, என்னால் இந்த நம்பரை மாற்ற முடியாது” என தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: அடிமடியில் கை வைத்த வீட்டோட மாப்பிள்ளை : கைவரிசை காட்டியதால் கம்பி எண்ணும் மருமகன்!

மேலும், சமூக வலைத்தளம் மூலம் அமரன் குழுவினரை டேக் செய்து பார்த்தும் எந்தவித பதிலும் இல்லை எனக் குறிப்பிட்டு உள்ள வாகீசன், படத்தில் இருந்து தனது மொபைல் எண்ணை நீக்கும்படியும், தான் மன உளைச்சலுக்கு ஆளானதற்கு 1.1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும் வாகீசன், வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

முன்னதாக, மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டு வெளியான அமரன் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. அதிலும், நெல்லை திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 161

    0

    0