பிரகாஷ்ராஜ் நின்ற இடத்தை கோமியம் ஊற்றி கழுவிய மாணவர்கள்.. கல்லூரி நிகழ்ச்சியில் அசிங்கப்படுத்திய இளைஞர்கள்..!

Author: Vignesh
9 August 2023, 3:30 pm

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். வில்லனாக நடித்து தமிழக மக்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். அந்தப் படத்தில் அசால்டாக நடித்து மக்களிடையே பாராட்டுக்களை பெற்றார்.

Prakashraj - Updatenews360

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பில் கவனம் செலுத்தி கொண்டிருந்தாலும் இந்திய அரசியலில் நிகழும் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக பாஜக-விற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

பிரதமர் மோடி மற்றும் பாஜக கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் பிரகாஷ்ராஜுக்கு பலர் எதிர்ப்பை கொடுத்து வந்த நிலையில், சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் தனியார் கல்லூரிக்கு பிரகாஷ்ராஜ் சென்று இருக்கிறார்.

தியேட்டர் வசனம், சமூகம் சார்ந்த உரையாடல், சினிமா போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிரகாஷ்ராஜ் சென்றதை அறிந்த மாணவர்கள் கல்லூரிக்கு சம்பந்தமே இல்லாத தனியார் நிகழ்ச்சி எப்படி கல்லூரி வளாகத்திற்கு நடத்தலாம் என்று கேள்வி எழுப்பியும், பிரகாஷ்ராஜ் வரக்கூடாது என்று கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Prakashraj - Updatenews360

பின்னர் மாணவர்களை சமாதானப்படுத்தியும், மாணவர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம் செய்து வந்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர், பிரகாஷ்ராஜை கல்லூரிக்கு வரவழைத்து சிறப்புரையாற்றிய பின்னர் புறப்பட்டு சென்றார்.

Prakashraj - Updatenews360

பிரகாஷ்ராஜ் சென்றதும் மாணவர்களில் சிலர் கோமியத்தை எடுத்து பிரகாஷ்ராஜ் சென்ற இடத்தை சுத்தம் செய்து அசிங்கப்படுத்தினர். மாணவர்களுடன் வேறு சிலரும் கலந்து போராட்டம் நடத்தியதாகவும் அவர்களின் அடையாளம் கண்டறியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வருகிறது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 411

    1

    0