‘நல்ல குடும்பத்தில் பிறந்தவங்க அங்க போக மாட்டாங்க’… பிக்பாஸை கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவில் வில்லன், காமெடி என்று சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவு பிரபலமாக இருந்தவர் கூல் சுரேஷ். நடிகர் சிம்புவின் நண்பராகவும்,ரசிகராகவும் தன்னை காட்டிக் கொண்டார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரோமோஷனுக்காக களம் இறங்கி வெந்து தணிந்தது காடு..சிம்புக்கு வணக்கத்தை போடு என கூவு கூவுனு கூவி பட்டிதொட்டி எங்கும் பிரபரமானார்.

கூல் சுரேஷ் சர்ச்சை பேச்சு

இந்நிலையில், பிக் நிகழ்ச்சி பற்றி அவர் பேசி உள்ள கருத்து சோஷியல் மீடியாவில் சர்ச்சையாகி உள்ளது. அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில் செய்தியாளர் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து போய் இருக்கிறார் உங்களை கூப்பிடவில்லையா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கூல் சுரேஷ், தயவு செய்து பிக் பாஸ் பத்தி பேசாதீங்க மனசு கொதிச்சி போய்இருக்கு.

அரையும் குறையுமா ஆடவிடுவதா பிக் பாஸ்

என்னங்க பிக் பாசு… காலையில பாட்டு போட்ட உடனே சின்ன சின்ன பொண்ணுங்களை அரையும் குறையுமா ஆடவிடுவது தான் பிக்பாஸா? இதைப்பார்க்க நான் போகனுமா? நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன்…நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக மாட்டாங்க என்றார். உடனே ஒரு செய்தியாளர் அப்போ உள்ளே இருப்பவர்கள் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லையா? என கேட்க அதுபற்றி எனக்குத் தெரியாது நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் அவ்வளவு தான் என்றார்.

ஓவர் கவர்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவர் கவர்ச்சி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பசங்க ஜொள்ளுவிட்டு பார்ப்பதற்கு இதுதான் காரணம். ஜிபி முத்துவை உள்ளே இருப்பவர்கள் டார்கெட் செய்கிறார் என்ற கேள்விக்கு முன்னேறினாலே பலர் நம்மை டார்கெட் செய்வார்கள் இதனால்,நாம் தான் உஷாராக இருக்க வேண்டும் என்று ஜிபி முத்துக்கு ஆதரவாக பேசினார். இருப்பினும் கூல் சுரேஷ் இவ்வாறு பேசி உள்ளது சர்ச்சையாகி உள்ளது.

சர்ச்சை பேச்சு

பிக்பாஸ்க்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல், உலகநாயகன் கமலஹாசனே 6 சீசன்களையும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இதில் கலந்து கொண்ட பலர் திரையில் நடிகராகும் வாய்ப்புகள் கிடைத்து பல படங்களில் நடித்து வருகிறார்கள்.ஆனால், கூல் சுரேஷ் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகமாட்டார்கள் என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Poorni

Recent Posts

அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!

ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…

10 minutes ago

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

15 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

15 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

16 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

17 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

17 hours ago

This website uses cookies.