பஹத் பாசில் சுயநலவாதி; காமெடி நடிகர் சொன்ன கருத்து; வலுக்கும் கண்டனம்

Author: Sudha
7 July 2024, 7:13 pm

பஹத் பாசில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவருடைய தந்தை ஃபாசில் பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர். பஹத் பாசில் 2002 ஆம் ஆண்டு இவரது தந்தை ஃபாசில் இயக்கிய கையெத்தும் தூரத்து எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மலையாளத் திரையுலகில் நடிகர் சங்கம், ‛அம்மா’ இதன் தலைவராக நடிகர் மோகன்லால் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கொச்சியில் கூடியது. இதில் முன்னணி நடிகர் நடிகையர் பலரும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் நகைச்சுவை நடிகரான அனூப் சந்திரன் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் பஹத் பாசில் மற்றும் நஸ்ரியா இருவரும் கலந்து கொள்ளாதது குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். கொச்சியில் இருந்து கொண்டே அவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றும் அந்த நேரத்தில் நடிகை மீரா நந்தனின் திருமணத்தில் கலந்துகொண்டனர் என்றும், பஹத் பாசில் அதிக சம்பளம் வாங்குவதால் அவர் தன்னை மட்டுமே பார்த்துக் கொள்ளும் சுயநலவாதியாக மாறிவிட்டார் என்றும் விமர்சித்தார்.

சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் அனூப் சந்திரனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொதுக்குழுவில் பஹத் பாசில் மட்டுமல்ல நிவின்பாலி, துல்கர் சல்மான், பிரித்விராஜ் என தற்போதைய மலையாள முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொள்ளவில்லை. அதையெல்லாம் குறிப்பிடாமல் பஹத் பாசிலை மட்டும் இவர் குறிவைத்து தாக்கி இருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ