நடிகர் சின்னி ஜெயந்த் வீட்டில் விசேஷம்; குஷி மூடில் நடிகர்; ரசிகர்கள் சொன்ன வாழ்த்து,..

Author: Sudha
14 July 2024, 3:00 pm

தமிழ்த் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் சின்னி ஜெயந்த். 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “கை கொடுக்கும் கை” படத்தின் மூலம் தொடங்கிய இவரது திரைப் பயணம், இவ்வாண்டு துவக்கத்தில் வெளியான ஆர் ஜே பாலாஜியின் “சிங்கப்பூர் சலூன்” திரைப்படம் வரை தொடர்கிறது. யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் “போட்” திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டும் போது தனது மகனை சினிமாவில் களமிறக்குவதற்கு பதிலாக சப் கலெக்டராக்கி அழகு பார்த்தார் நடிகர் சின்னி ஜெயந்த்.

இவருடைய மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த், தொடக்கத்தில் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக பணியாற்றினார். இப்போது விழுப்புரம் மாவட்ட சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

தற்போது ஸ்ருதன் ஜெய் ஜெயந்திற்கு திருமணம் நடக்கவுள்ளது, திருமண பத்திரிக்கை வேலையில் பிஸியாக இறங்கியுள்ளார் நடிகர் சின்னி ஜெயந்த்.

சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், சிறந்த அப்பாவாகவும் சின்னி ஜெயந்த் இருக்கிறார்.. யூபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 75வது இடம் பெற்று சின்னி ஜெயந்த் மகன் தேர்ச்சி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 134

    0

    0